spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!

இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!

-

- Advertisement -

இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!

கர்நாடகா துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்துக்களுடன் நாட்டின் நம்பர் ஒன் பணக்கார எம்.எல்.ஏவாக உள்ளார்.

டிகே சிவகுமார்

Association for Democratic Reforms என்ற அமைப்பு 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 4,001 எம்எல்ஏக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில், சிவக்குமார் தன்னிடம் மொத்தம் ரூ.273 கோடி அசையாச் சொத்துகளும், ரூ.1,140 கோடி அசையும் சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். சிவக்குமார் நிறுவனத்தின் கடன்கள் ரூ.265 கோடியாகும்.

we-r-hiring

பணக்கார எம்.எல்.ஏக்கள் பட்டியலில் முதல் இடத்தில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏக்களாவார். கர்நாடக எம்எல்ஏக்களில் குறிப்பிடத்தக்க 14 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள், ஒவ்வொருவரும் ரூ. 100 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளனர். பணக்கார எம்.எல்.ஏக்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான கே.எச்.புட்டஸ்வாமி கவுடா பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி. 3ஆவது இடத்தில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஆயிரத்து 156 கோடி ரூபாயாகும்.

MUST READ