- Advertisement -


திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு கொரோனா பாதிப்பு தான் காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இளைஞர் பலர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதற்கு, கொரோனா பாதிப்புடன் தொடர்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பதிலளித்துள்ளது.
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்
எனினும், திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்பாக, கவனத்தில் கொண்டிருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


