
திருப்பதியில் கூட்டம் நெரிசல் மிகுந்த காலங்களில் பக்தர்கள் தங்குவதற்கு நடமாடும் கண்டெய்னர் அறைகள் இயக்கப்படவுள்ளது.

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’: வெளியானது முக்கிய வழிகாட்டுதல்கள்!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், இரண்டு கண்டெய்னர் அறைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இவற்றை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!
மலைச் சார்ந்த வனப்பகுதியில் கூடுதல் கட்டிடங்களைக் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காத நிலையில், பக்தர்களுக்கு தங்கும் வசதிகளை செய்து தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடமாடும் கண்டெய்னர் அறைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இவற்றில் படுக்கையறை, குளியலறை, கழிவறை இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.