spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!

இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!

-

- Advertisement -

 

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Photo: Minister Amit Shah

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘பாதயாத்திரை’-யைத் தொடங்கி வைப்பதற்காக, இன்று (ஜூலை 28) தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

we-r-hiring

அதிதி ராவ் நடிக்கும் புதிய படம் …. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இன்று (ஜூலை 28) மாலை 04.00 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் பகுதிக்கு செல்கிறார். மாலை 05.45 மணி முதல் 07.15 மணி வரை ராமேஸ்வரத்தில் நடைபெறும் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் இரவு 07.25 மணி முதல் 08.30 மணி வரை தங்கும் விடுதியில் இரவு விருந்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இரவு 08.30 மணிக்கு கட்சி நிர்வாகிகள், முக்கிய நபர்களை தங்கும் விடுதியில் சந்திக்கவுள்ளார்.

கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!

நாளை (ஜூலை 29) காலை 05.45 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அமித்ஷா, காலை 10.30 மணியளவில் கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு செல்கிறார். பின்னர், காலை 11.00 மணிக்கு தங்கும் விடுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார்.

பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்கு செல்லும் அமித்ஷா, பிற்பகல் 01.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படுகிறார்.

இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

பிற்பகல் 02.00 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்கிறார்.

MUST READ