
தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

ஜி20 மாநாடு- டெல்லிக்கு 2 நாட்கள் பொதுவிடுமுறை
கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, குமாரசாமி, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கர்நாடகா மாநில துணை முதலமைச்சரும், நீர்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “காவிரி விவகாரத்தில் கர்நாடகா விவசாயிகள் நலன் காக்கப்படும். கர்நாடகாவில் பருவமழைக் குறைந்துள்ளதால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தது தவறு என்று முன்னாள் முதலமைச்சர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம். சட்டப்போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒத்துழைப்புத் தந்துள்ளனர். ஒருமித்த கருத்துடன் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பு வாதத்தை வைப்போம்” என்றார்.