
ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டக் கொடூரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கான் டமேட்டி என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், மனைவியை நிர்வாணப்படுத்தி கிராமம் முழுவதும் ஊர்வலமாகச் சென்றுள்ளார். இது தொடர்பான காணொளி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தனர்.
அந்த காணொளியை சமூக வலைதளங்களில் நீக்கிய காவல்துறை, இணையத்தில் அதை யாரும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்.
ரஜினி அண்ணன் அழைத்தால் சிவாஜி ப்ரொடக்ஷனில் திரைப்படம் பண்ண தயார்:நடிகர் பிரபு
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், அந்த பெண்ணுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கி, அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளித்தார்.