spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
Photo: ANI

தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு அக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் இன்று (அக்.03) மாலை 05.00 மணிக்கு நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள், வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்துகின்றன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம். தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோயில்களை விடுவிக்குமா? மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ