
திரைப்பட நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95) மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.
தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் மாலை அணிவித்து, நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.