spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!

-

- Advertisement -

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!
Video Crop Image

நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் உரிய தீர்வுக் காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

we-r-hiring

தங்கநகைகள் வாங்க சரியான நேரம் இது!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட குப்பிரெட்டிதாங்கல் பகுதியில், கடந்த 2013- ஆம் ஆண்டு மின் வாரியத்திற்காக பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி, நிலத்தின் உரிமையாளர்கள் சிலர், வேலூர் மாவட்ட சார்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. எனினும், மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவைப் பின்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டனர்.

“மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இதனை விசாரித்த நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகள் என ஆறு அரசு கார்கள், அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

MUST READ