
தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க 1,146 ஏக்கர் நிலங்களைப் பறிப்பதை அரசு கைவிடத் தவறினால், பெரும் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியது
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க, 1,146 ஏக்கர் உள்பட விளைநிலங்களை கையகப்படுத்த, மாநில அரசு முடிவுச் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்காக, மூன்று போகம் விளையும் நிலங்களைப் பறிக்க, தமிழக அரசு துணைப் போவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுப் போன்ற திட்டங்களைஅரசு நிலங்களை அடையாளம் கண்டு, அங்கு அமைப்பது சரியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
லேபிள் படத்தின் ட்ரைலர் வெளியானது
கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், ஏர்ணாம்குப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முடிவுச் செய்திருக்கும் நிலையில், மொத்தம் உள்ள 1,703 ஏக்கரில், 556 ஏக்கர் மட்டுமே அரசு புறம்போக்கு நிலங்களாகும் என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளைநிலங்களைப் பறிக்கும் முடிவை கைவிடத் தவறினால், பா.ம.க. சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.