spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'துபாயில் இருந்து தங்கம் கடத்தல்'- 3 பேர் கைது!

‘துபாயில் இருந்து தங்கம் கடத்தல்’- 3 பேர் கைது!

-

- Advertisement -

 

'துபாயில் இருந்து தங்கம் கடத்தல்'- 3 பேர் கைது!
Video Crop Image

சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

we-r-hiring

அக்கா மகனை ஹீரோவாக களமிறக்கி தனுஷ் இயக்கும் 3வது படம்….ஷூட்டிங் எப்போது?

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலையத்தின் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து வருகை தந்த அனைத்துப் பயணிகளிடமும், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

பயணிகள் கொண்டு உடைமைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பெண் பயணி ஒருவரின் பெட்டியில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அந்த பெட்டியை சோதனையிட்டதில் ஏழு கிலோ அளவிற்கு தங்கக்கட்டிகள் இருந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து நடத்திய விசாரணையில் பெட்டியைக் கொடுத்தது வேறு இருவர் என்பது தெரிய வந்தது.

‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!

அவர்களையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3.50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ