spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!

-

- Advertisement -

 

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!
Photo: Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகந்நாதன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

we-r-hiring

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் மீது பல்வேறு புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது தொடர்பாக, பல்கலைக்கழக தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த கருப்பூர் காவல்துறையினர், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகந்நாதனை அதிரடியாக கைது செய்தனர். இதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ