spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும்"- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

“ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும்”- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும்"- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

we-r-hiring

முத்தரப்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஜனவரி 09- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்….. நடிகர் சங்கம் சார்பில் கார்த்தியின் அதிரடி அறிவிப்பு!

ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜன.04) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள், சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் என 30- க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாததால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தைத் தொடர போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முடிவுச் செய்துள்ளனர்.

‘இங்க குறை சொல்ல ஒரு கூட்டமே சுத்திட்டிருக்கு’….. நடிகர் தனுஷ் வேதனை!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தலைவர் சௌந்தரராஜன், பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லாததால் காலவரையற்ற வேலை நிறுத்த முடிவை எடுத்திருப்பதாகவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், வேலை நிறுத்தத்தைக் கைவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 09- ஆம் தேதி முதல் சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

MUST READ