spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஅம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் - மக்கள் அச்சம்!

அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் – மக்கள் அச்சம்!

-

- Advertisement -

சென்னை அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் 30 அடி சாலையின் மையத்தின் உள்பக்கத்தில். சுமார்  21 அடி ஆழத்தில் 10 அடி அகலத்திற்கு சாலை திடீரென உள்வாங்கியது. சென்னை அம்பத்தூரில் இரண்டாவது முறையாக சாலை திடீரென உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம்-- மக்கள் அச்சம்

we-r-hiring

சென்னை பெருநகர மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7-ல்- 82 வது வார்டுக்குட்பட்ட கருக்கு மெயின்ரோடு பிரதான சாலையில் நான்கு மூலை சந்திப்பில் 30 அடி சாலையின் மையத்தின் உள்பக்கத்தில். சுமார்  21 அடி ஆழத்தில் 10 அடி அகலத்திற்கு  திடீரென உள்வாங்கியது, அப்பள்ளத்தில் இருந்து கழிவுநீர் சலசலவென சத்தத்துடன் சென்று கொண்டிருக்கிறது.இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் தலைமை காவலர்கள் ஜோசுவா, உதய் ஜோஷி, பாண்டியராஜன் மற்றும் ஊர் காவல் படை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் சாலையில் பள்ளம் விழுந்ததை கண்டு உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம்-- மக்கள் அச்சம்

இந்த நிலையில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் அம்பத்துார் மண்டல குழு தலைவர் மூர்த்தி அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ