spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாதுகாப்பு வளையத்திற்குள் பெரியார் பல்கலைக்கழகம்!

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரியார் பல்கலைக்கழகம்!

-

- Advertisement -

 

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரியார் பல்கலைக்கழகம்!
ஆளுநரின் வருகை, காவல்துறையினரின் சோதனையையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!

அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், கருப்பூர் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டார். துணைவேந்தருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ஆகியோர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அறை, பதிவாளர் அறை மற்றும் அவர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தலைமறைவாகினர். அவர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இன்று (ஜன.11) மதியம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைத் தரவுள்ள நிலையில், காலை 10.00 மணி முதல் பல்கலைக்கழகத்தில் 5 இடங்களில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

அதேபோல், தமிழக அரசின் கூடுதல் நிதித்துறைச் செயலாளர் அருண்சுந்தர் தயாளன், பெரியார் பல்கலைக்கழகத்தில் வரவு, செலவு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

மற்றொருபுறம், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழகம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பல்கலைக்கழகம் வளாகம் மற்றும் பல்கலைக்கழகம் வெளியில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ