
எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதேபோல் வடமொழி நிலத்தை அரித்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவிஞர் வைரமுத்து, “எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதேபோல் வடமொழி நிலத்தை அரித்துவிட்டது. தாய்மொழி என்பது பண்பாட்டு மொழி, ஆங்கிலம் என்பது நாகரிக மொழி. ஒரு மனிதன் பண்பாடு மற்றும் நாகரித்துடன் திகழ தமிழ் மற்றும் ஆங்கிலம் போதும்.
சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!
இனியும் எங்கள் மொழியை, நிலத்தை, இனத்தை இழக்கத் தயாராக இல்லை. மத்திய அரசு இந்தி மொழியைத் திணித்து தமிழர்களுக்கு அச்சம் கொடுக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.