
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பொதுமக்களால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!
பொங்கல் விழா முடிந்து நகரங்களுக்கு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 17,589 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் சென்னைக்கு மட்டும் கடந்த ஜனவரி 16- ஆம் தேதி முதல் இன்று (ஜன.18) வரை 11,130 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று (ஜன.17) மட்டும் சென்னைக்கு 1,726 சிறப்பு பேருந்துகளுடன் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மட்டும் கூடுதலாக 250 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை நோக்கி ஒரே சமயத்தில் வந்த வாகனங்களால் நேற்று (ஜன.17) மாலை முதலே செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆரோக்கியமான ஃப்ரூட் ரைஸ் செய்வது எப்படி?
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துச் சென்றனர். பெருங்களத்தூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஜிஎஸ்டி சாலை மற்றும் மேம்பாலம் என இருவழியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இதனால் வண்டலூரைத் தாண்டியும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.