

பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜோஸ்வா இமைபோல் காக்க… பிப்ரவரியில் வெளியிட திட்டம்…
6- வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நிறைவடைந்த உடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு பிரதமரை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் நிறைவடைய உள்ளதாகவும், அது தொடரபாக பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாதவன் – ஜோதிகாவின் சைத்தான்…. மார்ச் மாதம் ரிலீஸ்….
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை பிப்ரவரி 2-வது வாரம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


