spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாயார் இந்த ஜார்க்கண்ட் டைகர்?- விரிவான தகவல்!

யார் இந்த ஜார்க்கண்ட் டைகர்?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

யார் இந்த ஜார்க்கண்ட் டைகர்?- விரிவான தகவல்!

we-r-hiring

ஜார்க்கண்ட் டைகர் என அழைக்கப்படும் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். யார் அவர் விரிவாகப் பார்ப்போம்!

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதிய முதலமைச்சராக பழங்குடியின சமுதாயத்தின் முன்னணி தலைவர் சம்பாய் சோரன் (வயது 67) தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் சோரனின் மனைவி புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படும் நிலையில், புதிய திருப்பமான 67 வயதான சம்பாய் சோரன் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்தவரான சம்பாய் சோரன் 10- ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்விப் பயின்றவர்.

ஜார்க்கண்டின் தனி மாநில கோரிக்கைக்காகப் போராடியதால் ஜார்க்கண்ட் டைகர் என சம்பாய் சோரன் அழைக்கப்பட்டார். செரைகேலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். அதன் பின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றியவர்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன். அர்ஜுன் முண்டா தலைமையிலான பா.ஜ.க. அரசிலும் அமைச்சராக இருந்தவர் சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை, பழங்குடியின, பட்டியலின அமைச்சராக இருந்தவர் சம்பாய் சோரன்.

MUST READ