
ஆவடியில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நிழல் பகுதிக்கு சென்று அமர்ந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

வீட்டு வேலை செய்த பட்டியலின பெண்ணை துன்புறுத்திய பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருவள்ளூர் அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அருகேயுள்ள திடலில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நீண்ட நேரம் கடும் வெயிலில் நடைபெற்றதால், கூட்டத்தில் நீண்டநேரம் வெயிலில் நின்ற பெண்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், குடிநீர் வசதி இல்லாமல் நாவறண்டு பெண்கள் முதியவர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் கூட்டம் நிறைவடையாமல் நீண்ட நேரம் ஆனதால் நிழல் பகுதியில் அமர்ந்து கொண்டது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.


