spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?

சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?

-

- Advertisement -

சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதை தொடர்ந்து டீசரையும் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?கீர்த்தி சுரேஷ் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோருக்கு இடையேயான நேற்று வரை எனும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியிருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?இந்நிலையில் சமீபத்தில் வெளியான சைரன் படத்தின் போஸ்டரில் தலைப்பு மாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. அதாவது நான்கு வருடங்களுக்கு முன்பாகவே சைரன் எனும் திரைப்படம் ஒன்று உருவாகி இருந்ததாம். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தணிக்கை குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாம். இது தொடர்பாக கவுன்சிலிலும் பதியப்பட்டதாம். ஆனால் கவுன்சிலில், ஜெயம் ரவியின் சைரன் பட குழுவினரிடம் சைரன் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் பதியப்பட்டதை தெரிவிக்காமல் ஜெயம் ரவியின் சைரன் படத்தையும் பதிவு செய்து விட்டார்களாம். இந்நிலையில் ஜெயம் ரவியின் சைரன் படம் தணிக்கை குழுவிற்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே சைரன் என்ற தலைப்பில் ஒரு படம் சென்சாருக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர். சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?எனவே ஜெயம் ரவியின் சைரன் படத்திற்கு சென்சார் தர மறுத்ததால் தற்போது சைரன் படத்தின் தலைப்பானது சைரன் 108 என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ