spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை"- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!

“நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை”- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!

-

- Advertisement -

 

"நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை"- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!

we-r-hiring

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.10) வெளிநடப்பு செய்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி… நேரு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்…

அப்போது திருச்சி சிவா எம்.பி. கூறியதாவது, “ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 9- ஆம் தேதி வரை மட்டுமே கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் திடீரென மீண்டும் ஒன்று கூடி எந்த ஒரு காரணங்களும் சொல்லாமல் ஒரு நாள் அலுவல் நீட்டிக்கப்பட்டதாக கூறியதாகவும், வழக்கமாக இதுபோன்று அலுவல் நாட்கள் நீட்டிக்கப்பட்டால் எதற்காக நீட்டிக்கப்படுகிறது, நீட்டிக்கப்படுவதற்கான காரணம் கூறினாலும் அதற்கான தேவை இப்போது என்ன?

இப்படியான பல விஷயங்களை மத்திய அரசு விளக்கும். ஆனால் அப்படி இந்த ஒருநாள் நீட்டிப்பின் எதுவும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு விளக்கவில்லை. இதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை குறித்து இன்று விவாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராமர் கோவில் திறப்பு விழா குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. இப்படி ஒரே நாளில் இரண்டு விவாதங்களை குறுகிய நேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற விதிமுறைகளில் இல்லை. ஆனால் விதிமுறைகளை மீறி மத்திய அரசு செயல்படுகிறது.

தலைவர் 171 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கப்படுகிறார்கள் எனவும், குறிப்பாக விவாதங்களின் போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3 நிமிடம், தி.மு.க.விற்கு 6 நிமிடம், காங்கிரஸ் கட்சிக்கு 19 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கு அதிக நேரம் வழங்குவதாகவும் திருச்சி சிவா கூறினார். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது? என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே சன்சத் டிவி தொடங்கப்பட்டதாகவும் ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இப்போது சன்சத் தொலைக்காட்சி செயல்படுகிறது.

திருச்சி சிவா, நாடாளுமன்றம் அவர்களுடையது! நாடாளுமன்றத்தின் நேரம் அவர்களுடையது!! நாடாளுமன்றத்திற்கு என உள்ள தொலைக்காட்சியும் அவர்களுடையது!!! என்பதைப் போல செயல்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என்பது குறித்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ள திருச்சி சிவா பழைய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அவை தலைவருக்கு பின்புறம் தராசு இருக்கும் எனவும், தராசின் அர்த்தம் நடுநிலையாக இருப்பது.

அரபிக்குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை கீர்த்தி ஷெட்டி

ஆனால் இப்போது புதிய நாடாளுமன்றத்தில் அவை தலைவருக்கு பின்புறம் தராசும் இல்லை! தராசு போன்ற நடுநிலைமையும் இல்லை” என மத்திய பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

MUST READ