
இந்தியாவின் யுபிஐ சேவை, இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…
யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து பிரம்மாண்ட வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆன்லைன் செயலிகளில் யுபிஐ-யைப் பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் பணம் செலுத்தலாம், பெறலாம்.
இந்தியாவின் யுபிஐ சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவீன் ஜெகநாத் ஆகியோர் ஒருங்கிணைந்த கட்டணப் பரிவர்த்தனை சேவைகளைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…
குறிப்பாக, மொரீஷியஸ் நாட்டில் ரூபே கார்டு சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு வலுப்படுத்தப்படும். வேகமான தடையற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளால் பல தரப்பட்ட மக்களும் பயன்பெறுவர்.