
தெலங்கானா மாநிலத்தில் பாரதிய பாரத ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான லாஸ்யா நந்திதா தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் ஓட்டுநர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது வென்ற மகிழ்ச்சியில் நயன்தாரா…
லாஸ்யா நந்திதா மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், மறைந்த லாஸ்யா நந்திதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.