spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

-

- Advertisement -

 

"ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

we-r-hiring

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாண முன்பதிவு தொடக்கம்!

அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது, “பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் பா.ஜ.க. தலைவர் ஒருவர். உழைக்கிறவர்களுக்கே இங்கே மரியாதை. தொண்டர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க.; இங்கே எல்லோரும் ஒரே இடம், ஒரே பதவி. டெல்லியில் இருந்து விமானத்தில் தலைவர்கள் வருகிறார்; ரோடு ஷோ நடத்துகிறார்கள். ரோட்டில் பயணம் செல்வதால் என்ன பயன்? அதனால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!

எத்தனை தலைவர்கள் வந்துச் சென்றாலும், பேட்டி கொடுத்தாலும் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஆனைமலை- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டது அ.தி.மு.க. அரசு. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி செய்த போதும் மேகதாது அணை கட்டப்படும் என்றே சொன்னது. தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி பேசாமல் என்னை இழிவுப்படுத்திப் பேசுகின்றனர். தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை பற்றி அவதூறாக மட்டுமே பேசி வருகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ