
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும் என பேசியதாக சமூக வலைதளங்களில் அது தொடர்பான வீடியோக்கள் பரவினர். தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அமித்ஷா இவ்வாறு பேசியதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த காட்சி வெளியானது.
தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு!
ஆனால் அது சித்தரிக்கப்பட்ட காட்சி என எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், இது தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.