spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகோவிற்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை - தொண்டர்களுக்கு துரை வைகோ வைத்த வேண்டுகோள்!

வைகோவிற்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை – தொண்டர்களுக்கு துரை வைகோ வைத்த வேண்டுகோள்!

-

- Advertisement -

வைகோவிற்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார்..! இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ