மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜக அலுவலகளில் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி கலையிழந்து காணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது. டெல்லி மற்றும் தமிழ்நாடு பாஜக அலுவலகம் கமலாலயத்தில் அமைதி நிலவுகிறது. பாஜகவில் அனைவரும் ஆவலாக தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பாஜகவே முன்னிலை வகித்தாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கை கூடவில்லை என்பதால் கொண்டாட்டங்களின்றி கலையிழந்து காணப்படுகின்றன. வெற்றி நிலவரம் வரத்தொடங்கிய பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் எனத்தெரிகிறது.
https://www.apcnewstamil.com/news/india/lok-sabha-election-results-2024/89780
பாஜக தற்போதைய சூழ்நிலையில் 295 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது அந்த 295 இடங்கள் அப்படியே வெற்றியாக மாறுமா? அல்லது குறையுமா? என்கிற சூழ்நிலையில் அனைவரும் அமைதி காத்து தேர்தல் முடிவுகளை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக மதியம் 2 மணிக்கு மேலாக அந்த வெற்றி நிலவரங்களை பார்த்துவிட்டு கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிவருகிறார்கள்.