spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் - வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

-

- Advertisement -

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் - வீடியோ வைரல்

we-r-hiring

கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கூலித் தொழிலாளி சின்னமணி என்பவர் நேற்று மதியம் தனது மாமியார் ராசாத்தி என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானதால் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தனது உறவினர்கள் கள்ளச்சாராயம் அருந்தி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் மனமுடைந்து தனது வீட்டில் கடந்த ஐந்து ஆறு நாட்களுக்கு முன்பாக கண்ணு குட்டி என்பவரிடம் வாங்கி வீட்டில் வைத்திருந்த சாராயக்கட்டுகளில் இரண்டு மீதம் இருந்ததாகவும் மனவேதனையில் அருந்திவிட்டு ஒரு வணிக வளாகத்தின் சுவர் மீது மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் அளவுக்கு அதிகமான சாராய போதையில் சாலை ஓரம் படுத்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சின்ன மணியை எழுப்பி கேட்ட பொழுது தான் ஒரு வாரத்துக்கு முன்பாக 8 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்ததாகவும் அதில் மீதும் இருந்த இரண்டு பாக்கெட்டுகளை அருந்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு! (apcnewstamil.com)

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்து தற்பொழுது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

MUST READ