spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை - அண்ணாமலை

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமையாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை - அண்ணாமலை

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இது குறித்த அவருடைய X பதிவில் இத்தனை நடந்த பின்னரும் துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் முதல்வர் என்று கடுமையாக சாடியுள்ளார்.

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை - அண்ணாமலை

தனது பதிவில், திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வாரம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வீண் விளம்பரமும் செய்திருந்தார். இவர்கள் நடத்திய ஆய்வின் லட்சணம்தான், கள்ளச்சாராயத்தால் இன்று 55 உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம்.

இத்தனை நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் கள்ள மௌனம் காத்து வருகிறார். திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்த்துப் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்.. (apcnewstamil.com)

பாஜகவினரை கைது செய்து முடக்குவதில் காட்டும் அக்கறையைச் சிறிதேனும், கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால், பல குடும்பங்கள் இன்று ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

 

MUST READ