spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்

-

- Advertisement -

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதனால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்சமீபத்திய மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 3 நாட்களுக்கு முன்பு, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நீர்வரத்து சீரானதால் குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலியருவி ஆகியவற்றில் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அருவிகளில் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டதை தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனா்.

இன்ப அதிர்ச்சி…தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைவு!

we-r-hiring

 

MUST READ