கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி அப்பாவாக நடித்திருக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க மகனாக நடித்திருக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். மேலும் சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அரசியல் கலந்த கதைக்களத்தில் ஆக்சன் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும். இந்த படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ராம் சரண் பல விதமான லுக்கில் காட்டப்படுகிறார். அடுத்தது ஆக்ஷன் காட்சிகளும் எமோஷனல் காட்சிகளும்
காட்டப்படுகின்றன. பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.