அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளரகளின் பட்டிலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) தனக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தின் முக்கிய தொகுதியான பெரியகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கதிர் காமு களம் இறங்குகிறார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். கடந்த தேர்தல்களில் அமமுக சார்பில் போட்டியிட்ட மற்றும் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மேற்கு மற்றும் சைதாப்பேட்டை போன்ற முக்கிய தொகுதிகளில் அமமுக நேரடியாக திமுகவின் பலமான வேட்பாளர்களை எதிர்கொள்ள உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் சிபிஎம் போட்டி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
