Homeசெய்திகள்தேர்தல் 2026வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…

-

- Advertisement -

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

we-r-hiring

தமிழக அரசியல் அரங்கில் முக்கியமாக திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி (நாதக), தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை சமர்ப்பித்த அவர், தனது மனைவி கயல்விழியை மாற்று வேட்பாளராக முன்மொழிந்தார். இருவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று, வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். மற்ற கட்சி தலைவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்த நிலையில், சீமான் தாய் மற்றும் மனைவியுடன் வந்தது கவனத்தை ஈர்த்தது.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தது பேசுபொருளாகியுள்ளது. விழுப்புரம் தொகுதி வேட்பாளர் அபிநயா, கைகுழந்தையுடன் வந்து மனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை தொகுதியில் எழிலரசி, ஏர் கலப்பை மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.

அதேபோல், கோபி தொகுதியில் சீதாலட்சுமி ஏர் கலப்பையை சுமந்தும், பனையேறும் தொழிலாளர்களின் உபகரணங்களுடன் மனு தாக்கல் செய்தார். அம்பாசமுத்திரத்தில் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்ததும் கவனத்தை ஈர்த்தது.

இதனுடன், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் நாகம்மாள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் பாரதி செல்வன் உள்ளிட்ட வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும், விழுப்புரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராயர் மற்றும் கரூர் தொகுதியில் கருப்பையா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தத்தில், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. குறிப்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வித்தியாசமான அணுகுமுறைகள் இந்த தேர்தலில் தனித்துவமான கவனத்தை பெற்றுள்ளன.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…

MUST READ