Homeசெய்திகள்ஊட்டியில் மே 19-ம் தேதி 125வது மலர் கண்காட்சி

ஊட்டியில் மே 19-ம் தேதி 125வது மலர் கண்காட்சி

-

ஊட்டியில் மே 19-ம் தேதி 125வது மலர் கண்காட்சி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ல்  தொடக்கம்…!! – Seithi Solai

உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், “கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி மே 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது.

மே 12,13,14 தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 13,14,15 தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது. மே 19,20,21,22,23 ஆகிய 5 நாட்களில் பிரசித்தி பெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி நடக்கிறது” எனக் கூறினார்.

MUST READ