Homeசெய்திகள்47-வது புத்தகக் காட்சி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

47-வது புத்தகக் காட்சி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

-

சென்னையில் புத்தகக் காட்சி புதன்கிழமை ஜனவரி 3 தொடங்கி ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புத்தகக் காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கம் சாா்பில் 47-வது ‘சென்னை புத்தகக் காட்சி – 2024’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

புத்தகக் காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 

ஜனவரி 21 வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக காட்சியில் சுமார் 100 அரங்குகள் இடம்பெறவுள்ளன. வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 8.30 மணி வரையும் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். இதில் தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரை நடைபெறவுள்ளன. புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் ரூ.10/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MUST READ