Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் - அன்புமணி இடையே வார்த்தை மோதல்... பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

-

- Advertisement -

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகனான, முகுந்தனை  பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

அப்போது கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ்,  கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகந்தனுக்கு பதவியா? என மேடையிலயே  எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும், இல்லை என்றால் கட்சியை விட்டு போங்க என  காட்டமாக தெரிவித்தார். மேலும் இந்த கட்சி தன்னால் உருவாக்கப்பட்டது என்றும், கட்சியை உருவாக்கியவன் தான். எனவே தன் சொல்லிற்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள் இருக்கட்டும். இல்லையென்றால் கட்சியை விட்டு போகட்டும் என பேசியதால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.

மகள் வழி பேரனுக்கு கட்சியில் பதவி : டாக்டர் ராமதாஸ் – அன்புமணி இடையே கடும் மோதல் பாமக உடைகிறதா?

அப்போது, அன்புமணி ராமதாஸ் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்தார். பின்னர்
சென்னை பனையூரில் தனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளதாகவும், அங்கே தன்னை வந்து பார்க்கலாம் என கூறி தமது செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெற்ற வார்த்தை மோதல் காரணமாக தொண்டர்கள் இரு குழுக்களாக பிரிந்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள், ராமதாஸை செல்ல விடாமல் வாகனத்தை 10 நிமிடம் மறித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி நிர்வாகிகள் நியமனம், கூட்டணி அமைப்பது  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் முன்பு அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தார். பல்வேறு காரணங்களால் அவர் பதவியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அவருக்கு பொறுப்பு வழங்கியது அன்புமணி விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இன்றைய கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் தனது மூத்த மகளின் மகனான முகந்தனுக்கு பதவி வழங்குவதாக அறிவித்த நிலையில், அதற்கு வெளிப்படையாகவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக இருவர் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெளி உலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

பாமகவில் இருந்து ஏற்கனவே காடுவெட்டி குரு, பண்ருட்டி வேல்முருகன் போன்றோர் விலகிச் சென்றதால் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுக்குழு மேடையில் ராமதாஸ் – அன்புமணி  வார்த்தை மோதலில் ஈடுபட்டது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கூறியதை, அன்புமணி ஏற்று நடப்பார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராமதாஸ் எடுக்கும் முடிவு கட்சியின் நன்மைக்காகவே இருக்கும் என்றும், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ