spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபொள்ளாச்சி வழக்கில் அதிரடி! கதறி அழுத 9 பேர்! சிக்கிய அதிமுக புள்ளி!

பொள்ளாச்சி வழக்கில் அதிரடி! கதறி அழுத 9 பேர்! சிக்கிய அதிமுக புள்ளி!

-

- Advertisement -

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சிகள் , பொதுமக்களின் அழுத்தம் காரணமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்க தக்க தீர்ப்பாகும். குற்றம்சாட்ட 9 பேரும் ஆயுள் காலம் வரை சிறையில் இருக்க வேண்டும்.  முதலில் அவர்கள் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, செயின் பறிப்பு உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில் காவல்துறை 12 சாட்சிகளிடம் விசாரித்து, இது கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற அடிப்படையில் 376 டி என்கிற பிரிவு சேர்க்கப்பட்டு, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை பிரிவை பொறுத்த வரை குறைந்தபட்சம் 20 வருடங்களுக்கு குறையாமலோ அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள், சாகும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். மேல்முறையீட்டில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பார்த்தோம் என்றால் 2016 முதல் 2018 வரை பொள்ளாச்சியில் உள்ள 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள்தான் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் முக்கியமானர்கள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். முதன் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறபோது காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ வெளியாகி மக்கள் போராடிய பின்னர்தான் வழக்குப்பதிவு செய்தார்கள். 2019 பிப்ரவரி 24ம் தேதிதான் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். அதற்கு பிறகு விசாரணை நடைபெற்று 2021ல் ஒருவரை கைது செய்கிறார்கள். அவர் பொள்ளாச்சி அதிமுக இளைஞரணி செயலாளர் அருளானந்தம் என்பவரை கைது செய்கிறார்கள்.

இந்த குற்றச்சம்பவம் எப்படி நடைபெற்றது என்றால் ஒரு பெண்ணிடம் பழகி, அவரை தனியாக அழைத்துச்சென்று அவருடன் உறவு வைத்துக்கொள்கிறபோது வெளியில் இருக்கும் நண்பர்கள் மூலம் வீடியோ எடுப்பது. பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி, மீண்டும் வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது. வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டியதால் நிறைய பேர் வெளியில் சொல்லாமல் இந்த கொடுமையை அனுபவித்து வந்துள்ளனர்.  சில பெண்களை சும்மா அழைத்துச்சென்று அடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். இதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன், அதிமுக புள்ளிகளுக்கு எல்லாம் தொடர்பு உள்ளதாக சொன்னார்கள். அந்த உண்மை இன்று வரை வெளிவரவில்லை. இவர்கள் 9 பேரை மட்டும் பிக்ஸ் செய்துகொண்டு விசாரணை மேற்கொண்டார்கள். தற்போது தண்டனை உறுதியாகி உள்ளது.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

இந்த தண்டனை கூட இயல்பாக சாத்தியப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக சென்று காவல்துறையில் புகார் அளித்தால் அவர்கள் எப்ஐஆர் போடுவதில்லை. ஒரே ஒரு கல்லூரி மாணவி நடந்தவற்றை தன்னுடைய அண்ணனிடம் சொன்னார். அவர் சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரை ஓரிடத்திற்கு வரவழைத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்துள்ளார். பின்னர் அவர்களின் செல்போன்களை சோதனையிட்டபோது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகு 2019 பிப்ரவரி 24ஆம் தேதி எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். பிப்ரவரி 25ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை, திருநாவுக்கரசுவின் ஆட்கள் வந்து தாக்குதல் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வெளிச்சத்திற்கு வருகிறது. வேறு வழியில்லாமல்  எடப்பாடி அரசு சிபிஐயிடம் கொடுத்து, தற்போது தீர்ப்பு வந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ