spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇபிஎஸ் - மோடி கையெழுத்தாகும் ஒப்பந்தம்? 27-ல் செம டிவிஸ்ட் இருக்கு! தராசு ஷ்யாம் சொல்லும்...

இபிஎஸ் – மோடி கையெழுத்தாகும் ஒப்பந்தம்? 27-ல் செம டிவிஸ்ட் இருக்கு! தராசு ஷ்யாம் சொல்லும் கணக்கு!

-

- Advertisement -

ஜகதீப் தன்கருக்கு பிரிவு உபசார விழாகூட நடத்தாமல் அவர் மீது வெளிப்படையாக வெறுப்பை மோடி – அமித்ஷா காட்டிய நிலையில் , கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அவர்களுக்கான எதிரான கருத்தை எடப்பாடி எடுத்தால், அவருடைய நிலைமை என்ன ஆகும்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

tharasu shyam
tharasu shyam

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது மற்றும் பாஜக கூறி வரும் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது;-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பு விடுத்த நிலையில், அதனை விஜய் – சீமான் ஆகிய இருவரும் புறக்கணித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி எந்த அழைப்பு விடுத்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது. அதற்கு எளிமையான காரணம் என்ன என்றால்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு எதிர்கால திட்டம் இருக்கும். சீமானுக்கு கடந்த முறை என்ன திட்டம் என்றால்? தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதாகும். விஜய்க்கு இந்த முறை என்ன திட்டம் என்றால் எதிர்வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதாகும்.

we-r-hiring

சீமானுக்கு, இம்முறை தனது வாக்கு சதவீதத்தை 8-லிருந்து 10 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் திட்டமாக இருக்கும். அதற்கு அவர் எவ்வளவு வாக்குகள் வேண்டும். சராசரியாக 5 கோடி வாக்குகள் பதிவாகினால், அதில் 50 லட்சம் வாக்குகள் வாங்கிட வேண்டும். அதிமுக வாங்கியது 1.25 கோடி வாக்குகள்தான். திமுக அதைவிட சற்று கூடுதலாக வாக்குகளை வாங்கியது. இந்த 2 கட்சிகளும் சேர்ந்து 2.5 கோடி முதல் 2.75 கோடி வாக்குகள் வரை வாங்குகின்றன. அப்படி இருக்கையில் ஒரு கோடி வாக்குகளை வாங்குவது என்பது பெரிய திட்டமாகும்.  விஜயும், சீமானும் போனால் மட்டும் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று சொல்வது சாத்தியமற்றது.

2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் 27 லட்சம் வாக்குகளை வாங்கினார். தற்போது 2026 தேர்தல். இது விஜய்க்கு முதல் சட்டமன்றத் தேர்தலாகும். 2009 விஜயகாந்துக்கு இரண்டாவது தேர்தல் பாராளுமன்றத் தேர்தல். விஜய்க்கும் இரண்டாவது தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்.  27 லட்சம் வாக்குகளை பெற்ற விஜயகாந்த், அடுத்த தேர்தலில் 32 லட்சம் வாக்குகளை வாங்குகிறார். அப்போது வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட பாதிதான். எனவே விஜயகாந்தின் வாக்கு சதவீதத்தை பெறுவதற்கே, அவரைவிட இரண்டு மடங்கு அதிகமான வாக்குகளை விஜய் வாங்க வேண்டும். அதாவது 27 லட்சம் வாக்குகளை வாங்கிய இடத்தில் 54 லட்சம் வாக்குகளை வாங்கிட வேண்டும். அப்போதுதான் வாக்கு சதவீதம் தொடரும். அதிமுக கூட்டணியில் சேர்ந்து அவர்கள் கொடுக்கும் 20 அல்லது 40 இடங்களில் நின்றால் அது எப்படி சாத்தியமாகும். அப்போது விஜய், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மறந்துவிட்டு வேலை பார்ப்பாரா? நடைமுறையில் விஜயின் அரசியலே காலியாகி விடும். அதேபோல் சீமானுக்கும் வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை பார்க்க செல்கிறார். அப்போது அமித்ஷா சொல்வது போலவே மோடியும், கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்குதான் சிக்கலாகும். ஏனென்றால் அவர்கள் அப்படி சொல்லக் கூடியவர்கள்தான்.

eps modi

குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர், பாஜகவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். பாஜக கைகாட்டிய இடங்களில் எல்லாம் கொல்கத்தாவில் அவர் பாய்ந்தார். சமீபத்தில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்தது உள்பட அவர் உருவாக்காத சர்ச்சைகளே கிடையாது. தமிழ்நாட்டிற்கு வந்து துணை வேந்தர்கள் மாநாடு வரை சர்ச்சைகளை உருவாக்கினார். ஒரு சில மணி நேரங்களிலேயே அவரை தூக்கிவிட்டார்கள். அது கூட பரவாயில்லை. அவருக்கு ஒரு வழியனுப்பும் நிகழ்ச்சி கூட நடத்தாத அளவுக்கு பாஜக வெறுப்பை காட்டுகிறது. அவருடைய அரசு பங்களா சீல்வைக்கப்பட்டது என்று தகவல் வெளியாகிறது. அவர் ராஜஸ்தான் அரசியலுக்கு தான் திரும்ப போகிறார். அரசியல்வாதிகளால் சும்மா இருக்க முடியாது. ஜெகதீப் தன்கர் மீதான வெறுப்பை இந்த அளவுக்கு வெளிப்படையாக பாஜக காட்டுகிறது. அப்போது மோடி – அமித்ஷா எண்ணத்திற்கு மாற்றாக எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை வைத்தார் என்றால் அவருடைய கதி என்னவாகும்? அப்போது மோடியும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சொன்னார் என்றால், அது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனென்றால் தமிழ்நாட்டில் அது இடிக்கும்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே நான் ஏமாளி இல்லை என்று சொல்கிறார். அவர் நியாயமாக எப்படி சொல்லி இருக்க வேண்டும்.  அமித்ஷா அவர்களே நான் ஏமாளி அல்ல என்றுதானே சொல்ல வேண்டும். பிரச்சினை எங்கே ஏற்பட்டது என்றால் அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள். கடைசியாக சொன்ன அமித்ஷா. எஞ்சியிருப்பது மோடி மட்டும்தான். அவரும் சொல்லிவிட்டால் அதற்கு பிறகு அப்பீலே கிடையாது. அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியில் பங்கு என்று சொல்கிறார். அது 2019ல் பிரதமர் மோடி கடைபிடித்த பார்முலா ஆகும். அப்படி என்றால் ஒப்பந்தம் போடுகிறபோதே பிரச்சினை எழுமே. அன்புமணியும் அதைதான் சொல்கிறார். ஆட்சியில் பங்கு அல்லது அமைச்சரவையில் பங்கு என்று சொல்லாத கட்சியே கிடையாது. இது பெரிய சிக்கலாக மாறியுள்ளது. எதை வைத்து இதை நாம் யூகிக்க முடியும் என்றால்? 160 முதல் 170 வரை நிற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பிரித்து கொடுக்கிறார்கள். அப்போது 130 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. அப்போது கூட்டணி ஆட்சியில் பங்கு என்று, கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்தால் தானே. அப்போது கூட்டணி ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஷரத்தை சேர்க்க நாங்கள் என்ன ஏமாளிகளா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

கூட்டணி ஆட்சி என்பது நம்முடைய முந்தைய தேர்தல் வரலாற்றில் சரியாக வரவில்லை என்பதுதான் உண்மையாகும். கூட்டணி ஆட்சி பரிசோதனையை நாம் எடுக்கவில்லை. அதை நோக்கி மக்கள் நகர்கிறார்களா என்றும் தெரியவில்லை. திமுகவுக்கு ஒரு முறை அருதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திமுக அதை புத்திசாலித்தனமாக கையாண்டது. எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டால் பாமக, பாஜக போன்ற கட்சிகளின் ஆதரவோடு தான், ஆட்சி அமைக்க முடியும். அப்போது அமைச்சர் பொறுப்பு கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும். எனவே இது தேர்தலுக்கு பின்னர் பேச வேண்டிய விஷயமாகும். தேர்தலுக்கு முன்னாடி என்றால்? கூட்டணியில் யாருக்கு எவ்வளவு இடம் கிடைத்தாலும் நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்போம் என்று சொல்வதுதான். அப்படி நடிகர் விஜய் சொல்கிறார். ஆனால் திராவிட கட்சிகள் அப்படி சொல்லாது. மோடி கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டால் அதிமுக என்ன செய்ய போகிறது என்கிற கேள்விக்கு பதிலும் நம்மிடம் கிடையாது.  ஜெயங்கொண்டத்தில் ஜெயம் யாருக்கு என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்திற்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்கள். கம்மா போட்டு தொடர்ந்து கொண்டிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது என்று நினைப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ