பல்கலைக்கழக மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றிய 10 பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி இருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அளுநருக்கு அனுப்பிய 10 சட்டமசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநர் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அவர் நேர்மையாக செயல்படவில்லை என்று உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுர் ஆர். என்.ரவிக்கு சம்மட்டி அடியாகும். இதனை அவமானமாக கருதி அவரே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காரணம் இதற்கு முன்பு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவ்வாறு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தகுதி இழப்பு ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்தார்கள். இதனை எதிர்த்து பேராசிரியர் அன்பழகன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எப்படி ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தீர்கள் என ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வந்தது. முன்னாள் நீதிபதியான அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது மத்திய அரசு அவரை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் நடைமுறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. நீட் விலக்கு மசோதாவை முதலில் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் அந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு முறை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், மறுமுறை அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அதிகாரம் கிடையாது. அதனால் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்த இடம் மத்திய அரசுக்கு மிகவும் இடிக்கும். ஏனென்றால் இதுபோன்று பல மாநிலங்களில் பல பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினைகள் இந்த அளவுக்கு வெளிச்சம் பெற்றிருக்காதே தவிர, பிரச்சினைகள் இருக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தீர்ப்புகள் பொருந்தும். குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் அடிப்படையில்தான் ஆளுநர் பதவி வகிக்கிறார்கள். அப்போது இது அவருக்கும் மரியாதை குறைவான செயலாகும். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?.இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான உத்தரவையே நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். இது அவரை நியமித்த குடியரசு தலைவருக்கு தர்ம சங்கம் ஏற்படுகிறது. இந்த உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்பதால் மத்திய அரசுக்கும் பிரச்சினையாகும். இதனால் அடுத்து வரப்போகும் நாட்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிவிட்டது. அதன்படி பார்த்தால் தற்போது பல்கலைக்கழங்களின் வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றுதான் அர்த்தம். உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள மசோதாக்கள் பல்கலைக்கழகம் தொடர்பானதாகும். பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றுகிறது என்றால் அது மக்களின் நன்மைக்காக தான். ஆளுநர் வேந்தராக இருந்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் வேந்தராக இருந்தால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பாகும் என்று பல்வேறு காணரத்திற்காக கொண்டு வந்தோம்.
முதலமைச்சர், பல்கலைக்கழக வேந்தராவது என்பது, முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கருத்து வேறுபாடு வார்த்தை போராக மாறும்போது கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். இது சட்டமான பிறகு ஒப்புதல் கொடுக்க வேண்டிய அதிகாரி, கட்டாயம் ஒப்புதல் கொடுத்தாக வேண்டும். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். என்னுடைய 45 வருட அனுபவத்தில் இப்படி ஒரு தீர்ப்பை நான் பார்த்தது கிடையாது. ஆளுநர்களுக்கு குட்டு விழுந்து பார்த்துள்ளேன். பாத்திமா பீவி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல் தவறானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசின் சட்டமசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் செய்ததும் தவறு என்றாகி விட்டது. குடியரசு தலைவர் செய்தது தவறானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக தெரிவித்து விட்டனர்.

இது பெரிய சட்ட நெருக்கடியாகும். இதற்கான தீர்வு என்பது நாம் பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும். இதுதான் தீர்வு என்றால் பல மாநிலங்களுக்கு இதில் நிவாரணம் கிடைத்துவிடும். ஆளுநர்களின் கொடுங்கோன்மைக்கு கீழ் பல மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. காங்கிரஸ் காலத்தில் இருந்தே ஆளுநர்கள் அப்படிதான் இருந்தனர். ஞானகி அம்மாள் ஆட்சி முடிந்த உடன் ஆளுநர் குரானா பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆளுநர்கள் மத்திய அரசின் அரசியல் முடிவுகளுக்கு ஏற்ப நடந்துகொள்வது என்பது, தங்களை நியமித்தவர்களுக்கு விசிவாசம் காட்டுவது போன்றதாகும். ஆனால் அதையே நீங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுதான் செய்ய முடியும். இந்த விவகாரத்திலும் ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறுகிறார் என்பதுதான் புகார். ஆமாம் ஆளுநர் மீறி இருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.