Homeசெய்திகள்கட்டுரைசென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

-

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உலக உருண்டைக்குப் பின் அதிகம் பரிச்சயமானது இந்த மூன்றெழுத்துகள் பொறிக்கப்பட்ட சுழலும் உருண்டைதான். அரை நூற்றாண்டுக்காலமாய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பெயர். ஏவிஎம். ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என்பதன் சுருக்கமே இந்த மூன்றெழுத்து.

1907 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் காரைக்குடியில் ஆவிச்சி செட்டியார், லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாக பிறந்தார் மெய்யப்பன். தந்தை ஆவிச்சி செட்டியார் அந்நாளில் காரைக்குடியில் ஏவி அண்ட் சன்ஸ் என்ற மிகப் பிரபலமான வணிக நிறுவனத்தை நடத்தி வந்தார். அது தற்போதைய சூப்பர் மார்க்கெட் போன்றது. குண்டூசி முதல் அக்காலத்தில் பிரபலமான ஆஸ்டின் கார் வரை அந்தக் கடையில் கிடைக்கும் என்பது அதன் சிறப்புகளில் ஒன்று.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

அக்காலத்திலேயே தங்களது வாடிக்கையாளர்களுக்கு காலண்டர் அச்சடித்து தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. காரைக்குடியில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று வந்த மெய்யப்பன், பள்ளி செல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் வணிகத்தை கவனித்துக் கொள்ள தந்தைக்கு உதவியாக இருந்தார். தந்தை சென்னைக்கு வந்து கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கும் போதெல்லாம் உடன் வரும் வாய்ப்பு வாய்த்ததால் மெய்யப்பனுக்கு வணிக நுணுக்கங்கள் வசமானது.

மெய்யப்பன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம், தந்தை ஆவிச்சி செட்டியாருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏவி அண்டு சன்ஸ் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் மெய்யப்பன் ஏற்க வேண்டியதாயிற்று. ஆம் எட்டாம் வகுப்போடு பள்ளிக்கல்வியை நிறுத்தி விட்டு முழு நேரமும் வணிகத்தை கவனிக்கத் தொடங்கினார். தந்தையின் வழியில் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் நிறுவனத்தை நடத்திய அவர், தனது நிறுவனத்திற்கு புதிய கட்டடத்தையும் கட்டினார்.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

 

இந்நாளில்தான் இசைத்தட்டுகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. S.G. கிட்டப்பா, P U சின்னப்பா, கே.பி சுந்தராம்பாள் போன்றோரின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை கொலம்பியா, ஹெச்.எம்.வி போன்ற நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வந்தன. இந்த இசைத்தட்டுகளை மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யும் உரிமை ஏவி அண்ட் சன்ஸ் பெற்றிருந்தது. பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி விற்பதை விட நாமே தயாரித்து விற்றால் என்ன என்ற எண்ணம் மெய்யப்பன் மனதில் உதிக்க, கே.எஸ் நாராயணன், சிவன் ஆகிய இரு பங்குதாரர்களை இணைத்துக் கொண்டு சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற இசைத்தட்டு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடக்கினார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் தொடக்கப்பட்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ். இதுவே ஏவிஎம் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்புவதற்கான முதல்படியாக அமைந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த ஓடியான் நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு இசைத்தட்டுகள் தயாரிப்புப் பணியை மேற்கொண்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ். தொடக்க காலத்தில் சாஸ்தீரிய சங்கீதத்தை ஒலிப்பதிவு செய்து விற்று வந்த சரஸ்வதி ஸ்டோர்ஸ், மெய்யப்பனின் ஆலோசனைப்படி திரைப்பாடல்களை பதிவு செய்து விற்கத் தொடங்கியது.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்க, பின்னர், கர்நாடக இசைப் பிரபலங்களைப் பாட வைத்து இசைத் தட்டுகள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த நாடகங்களின் வசனங்களை ஒலிப்பதிவு செய்து இசைத்தட்டுகளாக விற்பனை செய்தனர். அந்த வகையில் முதன் முதலில் வசனத்தை இசைத்தட்டாக வெளியிட்டது ஏவிஎம் தான் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இசைத்தட்டு தயாரிப்பு மற்றும் விற்பனையில் கிடைத்த வெற்றியானது திரைப்படம் எடுத்தால் என்ன என்ற சிந்தனையை ஏவிஎம்முக்குள் கொண்டு வந்தது. இதனால் சரஸ்வதி சவுண்ட் புரொடொக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

1934 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மூலம் அல்லி அர்ஜூனா என்ற படம் தயாரிக்கப்பட்டது. தற்போதைய கொல்கத்தாவில் அமைந்திருந்த நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தோல்வியடைய, பங்குதாரர்கள் ஏவிஎம்மை விட்டு விலகிச் சென்றனர். இந்நிலையில், சரஸ்வதி டாக்கி புரொடியூசிங் கம்பெனியைத் தொடங்கி தனது அடுத்தபடமான ரத்னாவளியை உருவாக்கினார். இந்தப்படமும் வெற்றியைத்தரவில்லை. காட்சிப்பதிவின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைவுகளே இதற்குக் காரணமாக அமைந்தன.

ஏவிஎம்மின் மனதில் சொந்த படத்தயாரிப்பு அரங்கத்தை கட்டும் எண்ணம் உருவானது. அப்படி சொந்த அரங்கம் இருக்கும் பட்சத்தில் காட்சிகளைப் படமாக்குவதில் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்பது அவரின் எண்ணமாக இருந்தது. அது ஒருபுறம் இருக்க தனது மூன்றாவது படமாக இந்தி மற்றும் மராத்தியில் வெற்றி பெற்ற நந்தகுமார் திரைப்படத்தை தயாரித்தார். இதில் ஒரு புதுமையைச் செய்தார்.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

கதாநாயகனாக நடித்த டி.ஆர்.மகாலிங்கம் கணீர்க்குரலில் பாட, கதாநாயகியாக நடித்த நடிகைக்கு அத்துணை சிறப்பாக பாட வராத காரணத்தால், வேறோரு பாடகியை அவருக்கு வைத்து படமாக்கினார். இதன் மூலம் தமிழ்த்திரை உலகில முதன் முதலில் பின்னணி பாடும் முறையை கொண்டு வந்தவர் என்ற பெருமையும் ஏவிஎம்மை வந்தடைந்தது. 1938 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தகுமார் படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், வணிக ரீதியாக வெற்றியைத் தரவில்லை.

இந்நிலையில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் பங்குதாரர்கள் விலகிக்கொள்ள, அந்நிறுவனத்தையும் கவனித்துக் கொண்டு பிரகதி ஸ்டூடியோவை சென்னையில் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரகதி ஸ்டூடியோவின் முதல் தயாரிப்பாக வெளிவந்த திரைப்படம் பூ கைலாஸ். ராவணன், சிவன் மேல் கொண்டிருந்த பக்தியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாடகத்தின் திரைவடிவம்தான் அது. இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டது. ஏவி மெய்யப்பனுக்கு முதல் வெற்றியைக் கொடுத்த திரைப்படமாகவும் அது ஆனது.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

இதனைத் தொடர்ந்து வாயாடி, சபாபதி, என் மனைவி என தொடர்ச்சியாக வெற்றிப்படைங்களைக் கொடுத்தார் ஏவிஎம். இதில் 1942 ஆம் ஆண்டு டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என் ரத்தினம், சாரங்கபாணி, பத்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து இந்நாளிலும் பிரபலமாக பேசப்படும் படமாக உள்ள சபாபாதி ஏவிஎம் முதலில் இயக்கியத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தினை வெகுவாகப் பாராட்டி கல்கி விமர்சனம் எழுதியிருந்தது கூடுதல் சிறப்பு. இதே போல் கன்னடத்தில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து அதாவது டப்பிங் செய்து வெளியிட்டார் ஏவிஎம். இதுவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற, தமிழில் முதல் டப்பிங் படத்தைத் தந்தவர் என்ற பெருமையும் ஏவிஎம்மிற்கு சேர்ந்தது.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

1945 ஆம் ஆண்டு திரைத்துறையில் ஏவிமெய்யப்பனுக்கு மாபெரும் வெற்றி ஸ்ரீவள்ளி திரைப்படத்தின் மூலமாக கிடைத்தது. எஸ்.ஜி கிட்டப்பாவின் பாடல்களை அவரைப் போன்றே பாடுவதில் திறன் பெற்றிருந்த டி.ஆர்.மகாலிங்கம், நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்தப்படத்தில், குமாரி ருக்மணிக்கு பி.ஏ பெரியநாயகி பின்னணி பாடியிருந்தார்.

மிகச்சிறந்த பாடல்களைக் கொண்ட இந்தப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. இந்தத் திரைப்படம் எடுக்க ஆன செலவைப் போல் பத்து மடங்கு வசூலித்துக் கொடுத்ததாம். இந்த நேரத்தில்தான் பிரகதி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் விலகிச்செல்ல, ஏவிஎம் தனி ஸ்டூடியோ நிர்மாணிக்கும் எண்ணத்தினை செயல்படுத்தும் முடிவிற்கு வந்தார் ஏவி மெய்யப்பன். சாந்தோமில் தனது அலுவலகத்தை நிறுவினார்.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

சென்னையில் ஸ்டூடியோவை உருவாக்குவதில் ஒரு சில நடைமுறைச் சிக்கல்கள் உருவாகவே சொந்த ஊர்ப்பக்கம் அதை செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. தேவகோட்டை ஜமீன்தாருக்குச் சொந்தமான நாடக அரங்கையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் வாடகை பேசி ஒப்பந்தம் செய்தார் ஏவிஎம். கீற்றுக்கொட்டைக் குடில்கள் பல உருவாக்கப்பட்டன. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்குவதற்கு தனித் தனிக் குடில்கள் அமைக்கப்பட்டன. ஏவிஎம்மிற்கும் தனி அறை உருவாக்கப்பட்டது. இங்குதான் ஏவிஎம் ஸ்டூடியோஸ் என்ற பெயர் கொண்ட பலகை முதன் முதலில் ஒளிர்ந்தது.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

முதல் தயாரிப்பே சிறப்பானதாக இருக்க வேண்டும் என நினைத்த ஏவிஎம், நாம் இருவர் படத்தை தொடங்கினார். இந்தப் படத்தில் மற்றொரு சிறப்பம்சமாக முழுக்க முழுக்க பாரதியாரின் தேசபக்திப் பாடல்களை இடம்பெறச் செய்தார். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பாரதியார் பாடல்களின் உரிமையைப் பெற்றார். இதை பின்னாளில் அரசுடைமையாக்கக் கேட்டபோது மனம்வந்து தந்தார். அதற்காக எந்தப் பொருளையும் ஏவிஎம் பெற்றுக் கொள்ளவில்லை என்பது அவர் எத்தகைய பண்பாளர் என்பதை உலகிற்கு சொன்னது.

1947 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் முதலில் மதுரையில் வெளியான இந்தத் திரைப்படம், பின்னர் மார்ச் மாதத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. டி.ஆர்.மகாலிங்கம், டி.ஏ.ஜெயலட்சுமி நடித்த இந்தத் திரைப்படமும், அதன் பாடல்களும் வெகுவாக வெற்றி பெற்றன. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற குமாரி கமலாவின் நடனம் இன்றளவும் பிரபலம். இப்படத்தின் வெற்றியே ஏவிஎம் என்ற நிறுவனம் பின்னாளில் வியத்தகு சாதனைகளை திரைத்துறையில் படைக்கக் காரணமாயிற்று. நாம் இருவர் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் கொடி கட்டிப்பறந்த வி.கே.ஆர் என மூன்றெழுத்துகளால் அன்போடு அழைக்கப்பட்ட வி.கே.ராமசாமி நடித்த முதல் திரைப்படம். இதில் சிறப்பு என்னவென்றால் 19 வயது நிரம்பிய வி.கே.ஆர். இதில் முதியவர் வேடத்தில் அசத்தியிருந்தார்.

அக்காலத்தில் ஹிந்தியில் வெற்றி பெற்ற திரைப்படமான ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார் ஏவிஎம். 1947 டிசம்பரில் வெளியான இந்தத் திரைப்படமும் வெற்றி பெற்றது. வேதாள உலகம் திரைப்படத்தை எடுப்பது குறித்து நீண்ட நாள்களாக யோசித்து வந்த ஏவி மெய்யப்பன் அதனை செயல்படுத்தத் தொடங்கினார். பிரமாண்டமான அரங்குகள் அமைத்து வேதாள உலகம் சிறப்பாகப் படமாக்கப்பட்டது.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

இந்தத் திரைப்படத்தில் திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி இருவரும் நடனம் ஆடியிருந்தனர். 1948 ஆம் ஆண்டு வெளியான வேதாள உலகம் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படம் எடுத்து முடித்திருந்த நேரத்தில் தான் தேவகோட்டை ஏவிஎம் ஸ்டூடியோஸில் தீவிபத்து ஏற்பட்டது. திரைப்படத் தயாரிப்பு வெற்றிகரமாக இருப்பதை அறிந்த தேவகோட்டை ஜமீன்தார் படப்படிப்பு அரங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த தனது இடத்திற்கு அதிக வாடகைக் கேட்க, ஏவிஎம் ஸ்டூடியோஸ் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. தேவகோட்டையில் இருந்து அத்தனைப் பொருள்களும் சென்னையில் வடபழனிக்கு இடம் பெயர்ந்தன.

தேவகோட்டையைப் போலவே சென்னையிலும் அனைவருக்கும் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அத்தனை நாள் படங்கள் தயாரித்த அனுபவத்தில் எடுத்தவரை போட்டுப்பார்ப்பதற்கான ப்ரொஜக்ஷன் தியேட்டரையும் ஏவிஎம் உருவாக்கினார். சென்னையில் தயாரிக்கப்படும் முதல் படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்த அவர், வாழ்க்கை திரைப்படத்தின் கதையைத் தேர்வு செய்தார்.

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம்

டி.ஆர்.ராமச்சந்திரன், வைஜயந்திமாலா நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் 1949இல் வெளியானது. வெள்ளிவிழா கொண்டாடியது. இதுதான் வைஜயந்திமாலா அறிமுகமான திரைப்படம். இந்தத் திரைப்படம் தெலுங்கில் ஜீவிதம் என்ற பெயரிலும், ஹிந்தியில் பஹார் என்ற பெயரிலும் வெளியானது. தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வைஜயந்திமாலாவே கதாநாயகி வேடத்தை ஏற்றிருந்தார்.

MUST READ