Homeசெய்திகள்கட்டுரைநானும் மோடியை திட்டுறேன்! சத்தமாக கத்திய விஜய்!

நானும் மோடியை திட்டுறேன்! சத்தமாக கத்திய விஜய்!

-

- Advertisement -

திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கம் என்றும், அது டெல்லி அவருக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பொதுக்குழுவில் விஜய் திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாது:- நடிகர் விஜய் தவெக பொதுக்குழுவில் பேசியிருக்கிறார். அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு, வழக்கம் போல திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நல்ல கட்சிகள். அந்த கட்சிகள் எல்லாம் தங்களுடன் சேர வேண்டும் என்கிற வழக்கமான அந்த அழைப்பையே விடுத்திருக்கிறார். விசிக ஒரு நல்ல கட்சி. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று ஏன் ஸ்டாலின் சொல்லவில்லை என்கிறார். ஆதவுக்கு எதாவது வரலாறு தெரியுமா என்று என்று தெரியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சொல்வதற்கு முன்பாக 2019லேயே திமுக தலைவர் ஸ்டாலின் தான்  ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று சொன்னார். கலைஞர் சிலை திறப்பு விழாவில் சொன்னார். அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியே சொல்லாதபோது ஸ்டாலின் சொன்னார். இவர் காங்கிரஸ் கட்சியை தன்பக்கம் இழுக்கிறாரா?

ராகுல்காந்தி நல்லவர். திருமாவளவன் நல்லவர். கம்யூனிஸ்ட்டுகள் நல்லவர்கள், ஜவாஹிருல்லா நல்லவர்  என்று திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எல்லோரும் நல்லவர்கள் என்றால், நீங்கள் எதுக்கு தனியாக இருக்கிறீர்கள். இவங்களுடன் சேர்ந்து கூட்டணி வைப்பதுதான் அவர்களது திட்டமே. ஆதவ் அர்ஜுனாவின் திட்டம் என்பது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது. திமுக கூட்டணியை மட்டும் உடைத்து விட்டுவிடுங்கள் அவ்வளவுதான். ஏனென்றால் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. திமுக கூட்டணியை எப்படியாவது உடைத்து எடப்பாடியுடன் சேர்க்க வேண்டும். அல்லது விஜயுடன் சேர்க்க வேண்டும். தற்போது எடப்பாடி பாஜக பக்கம் சென்றுவிட்டார் என்று தெரிந்த உடன், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எல்லாம் வாங்க என்று இழுப்பதுதான். ஆதவ் அர்ஜுனா பேச்சு என்பது வெளிப்படையாக ஒரு அசைன்மெண்டுக்கு செயல்படுகிறார் என்பது துல்லியமாக தெரிகிறது.

ஜெயலலிதா போன்ற ஒரு ஆட்சியை பார்க்க முடியாது. எம்ஜிஆரை போன்ற ஒரு நல்லவரை பார்க்க முடியாது என்று ஆதவ் சொல்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா தான் இவர்களது தலைவர் என்றால் எதற்காக தனிக் கட்சியை நடத்துகிறார்கள். அதற்காகதான் அதிமுக என்கிற ஒரு பாரம்பரிய கட்சி இருக்கிறதே? பிறகு எதற்கு இவர்கள் ஒரு கட்சியை நடத்துகிறார்கள். ஜெயலலிதா அம்மையார் மீது இவ்வளவு பாசம் இருந்தால், அவர் மறைந்த உடனேயே விஜய் அரசியலுக்கு வந்திருக்கலாமே? எதற்கு கலைஞர் இறந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு வருகிறார். ஜெயலலிதா நல்லவர் என்கிற விஷயம் விஜய்க்கு இப்போதுதான் தெரியுமா? காவலன் பட சர்ச்சையின்போதும், தலைவா படத்தின் சர்ச்சையின்போதும் ஜெயலலிதா நல்லவர் என்று தெரியவில்லையா? எதற்கு கொடநாட்டிற்கு போய் பம்மிக் கொண்டு நின்றீர்கள்? உங்களது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், எம்ஜிஆர் ஆட்சியை பற்றி விமர்சித்து படம் எடுத்தார். அவர் முன்னாடி எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்கிறீர்கள்.

மாற்றத்தை கொண்டுவர போவதாக சொல்லும் நீங்கள் ஏன் அடுத்த கட்சிகளின் தலைவர்களை இரவல் வாங்குகிறீர்கள்? பாஜகவால் தங்களது கொள்கையை சொல்ல முடியாது. அதனால் எம்ஜிஆர் வாழ்க. காமராஜர் வாழ்க என்பார்கள். கர்நாடகாவில் போய் தேவகவுடா நல்லவர் என்பார்கள். கேரளாவில் போய் நாராயண குரு நல்லவர் என்பார்கள். இவர்கள் எல்லோரும் சனாதனத்திற்கு எதிரானவர்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் பாஜகவினர் தங்கள் ஆட்கள் என்பார்கள். அதே பாஜகவின் தொணியில்தான் ஆதவ் அர்ஜுனா போன்றோர் பேசுகின்றனர். கட்சியில் ஏற்ற இறக்கமுடன் பேசி உடல்மொழியை வைத்துக்கொண்டுதான் உள்ளாரே தவிர, எந்த ஒரு கருத்தும் இயல்பாக வரவில்லை. என் இனத்தை வதைக்கிறீர்கள். என் மொழியை அழிக்கிறீர்கள். எனக்கான நிதியை குறைக்கிறீர்கள் என்ற கோபங்கள் இல்லை. மோடியை திட்டமாட்டேன் என்று சொல்கிறீர்கள். இந்தா திட்டிவிட்டேன் என்கிறீர்கள். இதுதான் ஒரு அரசியல் தலைவருடைய பேச்சா?

அண்ணாமலை

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் நடக்க முடியவில்லை என்று எவ்வளவு பெரிய பொய்யை தமிழ்நாட்டில் சொல்கிறீர்கள். நீங்கள் திமுகவை விமர்சியுங்கள், அதிமுகவை விமர்சியுங்கள். ஆனால் தமிழ்நாடு என்கிற கட்டமைப்பை கொச்சை படுத்தாதீர்கள். நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளது உத்தரபிரதேசத்தில். நீங்கள் யோகி ஆதித்யநாத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு பிறகு டெல்லி, பீகார், மகாராஷ்டிரா என திராவிட கட்சிகளுக்கு தொடர்பு இல்லாத மாநிலங்களாகும். பெண்கள் உயர்கல்வி அதிகம் பயிலும் மாநிலம் தமிழ்நாடு. பெண்கள்  அதிகமாக வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடு. அனைத்து சாதிகளை சேர்ந்த பெண்களும் வேலைக்கு செல்வது, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் அதிகம் உள்ளது தமிழ்நாடு. இந்த மாநிலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா?

இவர்கள் சொல்வது, இவர்களது நோக்கம் என்பது வெற்றி பெறுவதற்காக அல்ல. தனது கட்சியினரின் ஆழ் மனதில் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று பதிய வைப்பதற்காக தான். சின்ன பசங்க தனக்கு ஒரு தலைவர், தனக்கு ஒரு அரசியல் கட்சி என்று சந்தோஷமாக பேசுகிறார்களே தவிர, விஷயம் தெரிந்த  ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸீ ஆனந்த், விஜய் ஆகிய 3 பேருக்கும் தெரியும். இது ஆட்சி அமைப்பதற்காக அவர்கள் பேசவில்லை, டெல்லி அசைன்மெண்ட்தான் என்று. சீமான் எப்படி எல்லாம் பாஜகவை விமர்சிப்பது போல விமர்சித்து விட்டு,  திராவிடத்தை அழிப்பதுதான் நோக்கம் என்று சொல்லுகிறாரோ, அதே நோக்கத்தில்தான் விஜயும் பேசுகிறார். திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கம். கேட்டால் நாங்கள் பாஜகவையும் எதிர்க்கிறோம் என்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ