spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயலட்சுமி பாலியல் தொழிலாளியா? சீமானின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவேன்! உமாபதி ஆவேசப்பேட்டி!

விஜயலட்சுமி பாலியல் தொழிலாளியா? சீமானின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவேன்! உமாபதி ஆவேசப்பேட்டி!

-

- Advertisement -

நடிகை விஜயலட்சுமி சம்பாதித்த பணத்தை பறித்துக்கொண்டு, அவரது வாழ்க்கையையும் சீமான் சீரழித்துவிட்டதாகவும், விஜயலட்சுமியால் தான் அவருக்கு முடிவு என்றும் பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகை விஜயலட்சுமி குறித்து சீமான் அவதூறாக பேசுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள சீமான் நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி என்று விமர்சித்துள்ளார். சீமான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளார். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவாக ஹெச்.ராஜா வருகிறார். காரணம் அவர்கள் தான் சீமானை வளர்த்துவிடுபவர்கள். தமிழ் தேசிய அரசியல் பேசிக்கொண்டிருந்த சீமான், ஒரு அரசியல் அடியாளாக மாறிவிட்டார். சீமான் உதவி இயக்குநராக இருந்தபோது வறுமையில் வாடினார். பல நாட்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கே சிமரப்பட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தார். இந்த கொள்கையை அவர் கையில் எடுத்த உடன் பணம் கொட்டத் தொடங்குகிறது. ஒரு படத்தில் தம்பி சுமனை காப்பாற்றுவதற்காக ரஜினி திருடுவதை பார்த்து, அவரை கொள்ளையர்கள் தத்தெடுத்து பெரிய கொள்ளையனாக வளர்ப்பார்கள். அதுபோலத்தான் சீமானை ஆர்எஸ்எஸ் அமைப்பு தத்தெடுத்து உள்ளனர்.  இவன்தான் வேண்டும். இவனை வைத்துதான் எதிராளிகளை ஒழிக்க முடியும். அதனால் அவருக்கு ஒரு பேமெண்ட் கொடுத்து அவர் என்ன ஆசைப் படுகிறார் என கேட்டனர். ஒரு நல்ல வீடு, ஒரு மனைவி, ஒரு குடும்பத்தில் ஒரு காரோடு வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈழத் தமிழர்கள் பணத்தில் கார் வாங்கியதால் இந்த அக்ரிமெண்டிற்கு ஒத்துவர வில்லை. எனக்கு ஈசிஆரில் பங்களா வேண்டும் என்று கேட்கிறார்.

டெல்லியில் பேசி சம்மதம் பெற்ற பின்னர் ஈசிஆரில் பங்களா வாங்கித் தருகிறார்கள். பின்னர் அஜெண்டா கொடுக்கிறார்கள். நீ போய் திமுகவை அழிக்க வேண்டும், பெரியார் கொள்கைகளை அசிங்க அசிங்கமாக பேச வேண்டும். திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை அழி. அற் காக எவ்வளவு உழைக்கிறாயோ அவ்வளவு நிதி என்று சொல்கிறார்கள். உன்னை போலீசார் பிடிக்க முடியாது. பிடித்தால் நீதிமன்றத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உயர்நீதிமன்றத்தில் முடியவில்லையா? டெல்லிக்கு வாங்கள் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நடிகை பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். முதலில் ஹெச்.ராஜாவுக்கு இது தெரியாது. இப்போதுதான் அவருக்கு சீமான் நம்ம ஆள்தான் என்று தெரிந்துள்ளது. இன எதிரிகளிடம் காசை வாங்கிக்கொண்டு பெரியார் என்கிற பிம்பத்தை என்றைக்கும் உடைக்க வேண்டும் என்று பார்த்தாரோ அன்றைக்கே அவரை விடக்கூடாது என்றுதான் எல்லாரும் சேர்ந்து அடித்தார்கள்.

விஜயலட்சுமி குறித்து யாரும் சொல்லாத வார்த்தைகளை சொல்லிவிட்டார். அன்றைக்கு அந்த பெண் மார்க்கெட்டில் இருந்தபோது அதனை உடைத்து, கணவர் என்று நம்ப வைத்து ஏமாற்றினார். பெரியாரை, பிரபாகரனை பற்றி பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது. அவரை ஏமாற்றி 60 லட்சம் பணம் வாங்கியுள்ளார். திராவிடம் மோசம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொம்பளையை கல்யாணம் செய்துகொள்கிறேன் என சொல்லி ரூ.60 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். வெளியில் வந்து விஜயலட்சுமியிடம் காசு இல்லை நான் ரூ.50 ஆயிரம் வழங்கினேன் என்கிறார். அன்று விஜயலட்சுமி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை பிடிங்கிக்கொண்டு, இன்று அவருக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தேன் என்கிறார். விஜயலட்சுமியின் அம்மா இறந்தே விட்டார். அவரது சகோதரி கோமா நிலையில் உள்ளார். இதற்கெல்லாம் மனஉளைச்சல்தான் காரணம். விருப்பப்பட்டுதான் வந்தார் என்கிறார். அப்படி வந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்களா? இந்த பேட்டிக்கு பின்னர், விஜயலட்சுமி தனது வாழ்வே போனாலும் பரவாயில்லை, சீமானை விட மாட்டேன் என்கிறார். அவரால்தான் சீமானுக்கு அழிவு வரப்போகிறது.

 

விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேட்டால் அதை பற்றி பேச வேண்டாம் என சொல்ல வேண்டியதுதானே. அப்படி சொல்லியிருந்தால் நீங்கள் ஒரு அரசியல் தலைவர். உங்கள் குடும்பத்தையே துன்புறுத்துவதாக சொல்கிறீர்கள். அதை நீங்கள் முடித்து வைத்திருந்தால் ஏன் சொல்லப் போகிறார்கள். அப்போது நீங்கள் வேண்டுமென்றே வீம்புக்கு பதில் சொல்கிறீர்கள். ஒருவர் கேள்வி எழுப்பினால் அதனை தவிர்க்க முடியாதா? அதை விட்டுவிட்டு பாலியல் தொழிலாளி என்று கூறுவதா? அவர் கையால் நீங்கள் சோறு திங்கவில்லையா? என்ன என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இல்லை. ஈழ அரசியலை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது?  ஈழத்தில் இருந்து உங்களுக்கு காசு கொடுப்பவர்கள் எல்லாம் முட்டாள் என்று நினைக்கிறீர்கள். இப்போது பெரும்பாலானோர் பணம் கொடுப்பதில்லை. ஈழ அரசியலை தொட்டுவிட்டு ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் அரசியலுக்கான முடிவு அங்கிருந்துதான் வரும். உங்களுடைய அரசியல் ஆரம்பமும் ஈழம்தான், முடிவும் ஈழம்தான். இனி யாரும் உங்களை காப்பாற்ற வர மாட்டார்கள். ஈழத் தமிழர்கள்தான் உண்டியலில் காசு போட்டு வளர்த்துவிட்டனர். இன்று அவர்கள் இருக்கும் மனநிலைக்கு, சீமானின் அரசியலை முடித்துவைக்கப் போவதும் அவர்கள்தான். ஒரே ஒரு உளவுத்துறை தலைவனை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் உளவு பார்த்தவர்கள். தமிழ்நாட்டில் செய்தியாளர்களிடம் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை அவருக்கு தெரியும்.

விஜயலட்சுமி பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது சீமானை போலீசார் அடிக்கப் போகிறார்கள் என வதந்தியை பரப்பிவிட்டனர். இதனால் பதற்றத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் எல்லோரும் திரண்டு வாங்கள் என தகவல்களை பரப்பினார்கள். அதனால்தான் வீரப்பன் மகள் உள்பட எல்லோரையும் அழைத்துவந்தனர். எதற்காக இதனை செய்தார் என்றால் போலிசார் சம்மன் ஒட்டியபோது வரமாட்டேன் என சொன்னார். பின்னர் வீட்டில் போலிசார் நடந்துகொண்ட விதத்தை பார்த்து அலறி அடித்துக்கொண்டு மாலை ஆஜராவதாக சொன்னார். விசாரணையின்போது வர மாட்டேன், முடிந்ததை பார்த்துக்கொள் என்று சொன்னீர்களே, இப்போது ஏன் ஆஜராகினீர்கள் என்று போலிசார் கேட்டுள்ளனர்.போலீசார் அவரது வாட்ச்மேனை அடித்த அடியில் சீமான் மிரண்டுபோய் காவல்நிலையத்தில் ஆஜராகிவிட்டார்.

15 வருடங்களாக என்னை துன்புறுத்துகிறார்கள் என்று சீமான் செய்தியாளர்களிடம் சொல்கிறார். அப்போது 50 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன பெரியாரை நீங்கள் ஏன் இழுக்கிறீர்கள். பெரியார் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. தமிழ் தேசியம், தமிழர் என்று சொல்லி பல பேரை ஏமாற்றி காசை சேர்த்துவிட்டார். நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வேல் முருகன் கட்சியில் சேர்கிறார்கள். சிலர் விஜய் கட்சியில் சேர்கின்றனர். விஜய் இவரை போன்ற மோசமான நபர் அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ