Homeசெய்திகள்கட்டுரைஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை... நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் -...

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் – யூடூ புரூட்டஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

சென்னையில்  ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் சீமானை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எல்லாம் சரியாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக கூறி யார் அந்த சார் என தினமும் கேட்டு வருகின்றனர். இதேபோல, சென்னை மடுவாங்கரையில் சக்திவேல் என்பவர் ஐ.டி அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஐ.டி. விங்கின் மாநில செயலாளராக உள்ளார். இவரது அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஐ.டி. விங் தொடர்பான வேலைகளும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சக்திவேல், தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். பெண்களை விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வர வழைத்துள்ளார். அப்போது 3 நாம் தமிழர்கள் கட்சியினர் அலுவலகத்தில் இருந்துள்ளனர். சக்திவேல் அந்த பெண்ணிற்கு சூயிங் கம் என்று கூறி மயக்க மருந்து  கொடுத்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த பெண்ணிற்கு சக்திவேல் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனை வீடியோவாக பதிவுசெய்து வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் பாதிக்கப்பட்டதாக 3 பெண்கள் சக்திவேல் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த அலுவலகத்தில் 60 பெண்கள் பணிபுரியும் நிலையில், அவர்களுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களும் தங்களை போன்று பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், சக்திவேல், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்கள் தேவை என்றும், வெளியூர்களுக்கு சென்று அவர்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு இல்லா விட்டால் பாலியல் வீடியோவை பெண்களின் கணவருக்கு அனுப்புவேன் என்று மிரட்டியுள்ளார். திருமணம் ஆகாத பெண்கள் என்றால், நாம் தமிழர் ஐடி விங்கிற்கு அனுப்பி வெளியிடுவேன் என மிரட்டியுள்ளனர். இது எவ்வளவு பெரிய விவகாரம். இது எத்தனை ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது?. நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளராக உள்ள ஒருவரால் 60 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் இதனை  நக்கீரன் பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசைக்கு இணங்கிச் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கட்சியில் புரமோஷன் வழங்குவதாகவும் சக்திவேல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வெளியானது. வெளியான சிறிது நேரத்தில், அந்த வீடியோ பிரைவேட் செய்யப்பட்டது. அப்படி என்றால் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீமான் மிரட்டல் விடுத்துள்ளாரா?. ஏன் கேட்கிறேன் என்றால், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த பின்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்காக யார் என்றே தெரியாத சாரை தேடி கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு 60 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அப்போது யார் அந்த சார்கள்?. மாணவி விகாரத்தில் அவரோ, அல்லது கைது செய்யப்பட்ட ஞானசேகரனோ  சொன்னால் தான் யார் அந்த சார் என்று தெரியும். ஆனால் நாம் தமிழர் ஐ.டி. விங் நிர்வாகி சக்திவேல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக, யார் அந்த சார்கள் என்ற விவரத்தை தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் நிர்வாகிகள் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருப்பார்கள் அல்லவா. யாருடன் பெட்டை ஷேர் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பார்கள் அல்லவா. ஆனால் இந்த விவகாரத்தில் சக்திவேலை மட்டும் தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் சேர்க்கவில்லை. கைதுசெய்யப்பட்ட நபர் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை காண்பித்துதான் மிரட்டுவார் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். அப்படி எனில் அவரது போனில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்தால், யார் என்பது தெரியவரும். இவ்வளவு பெரிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. 3 பெண்கள் புகார் அளித்த நிலையில் ஒரு எப்.ஐ.ஆர் மட்டுமே போடப்பட்டது. பின்னர் நாங்கள் 2 நாட்கள் அலைந்த பின்னர்தான் மற்ற 2 பெண்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தெலுங்கானாவில் பேருந்தில் பெண் பலாத்காரம் - ஓட்டுநர் கைது

இதேபோல்,, கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிக்கு சொந்தமான கல்லூரி உள்ளது. அவர்தான் கல்லுரியின் தாளாளர். அவன் கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கு, பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த பெண் காவல் நிலையத்தில் கல்லுரி நிர்வாகிகள் 5 பேர் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். அதில் 6வது நபரான பேராசியரை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது. மற்றவர்கள் மீது நடவடிக்கை வில்லை. இது குறித்து கேட்டபோது, நாதக நிர்வாகியான பள்ளியின் தாளாளர் குற்றச்சாட்டை வாபஸ் பெற வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தினமும் 10 ரவுடிகளை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து அந்த பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் தெரிவித்தபோதும், காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏனெனில் இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவெளியில் வந்து புகார் அளித்தால் நாம் அவர்களை குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிககப்பட்ட பெண்கள் புகார் அளிக்கவில்லை. இப்போது ஏன் பெண்கள் வெளியில் வந்து புகார் அளிக்கின்றனர் என்றால் திமுக அரசு கேட்கும் என்ற நம்பிக்கையில் தான். அந்த கல்லூரியில் இந்த பெண்ணிற்கு மட்டும்தான் இது நடைபெற்றுள்ளதா?. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் அதே கல்லுரியில் மாணவி ஒருவர் கழிவறையில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை எதிர்த்து கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை 6 மாதம் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கல்லூரியில் உள்ள மாணவர்களை நாம் தமிழர் கட்சியில் சேர்த்து, வருண்குமார் ஐபிஎஸ்க்கு எதிராக டிவிட் போடச் செய்துள்ளனர். ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவெளியில் புகார் அளிக்க நிச்சயம் முன்வர மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ