Homeசெய்திகள்கட்டுரைதிருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?

திருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?

-

- Advertisement -

திமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தான் அவர்கள் சேர்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் நிலைப்பாடு, திருமாவளவனுக்கு பாமக மாநாட்டு அழைப்பிதழ் வழங்கிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி உள்ளதாவது:- தேர்தலில் எனக்கு தெரிந்து சீமான் 90 சதவீதம் வெற்றி பெற மாட்டார். அவர் தனித்து எங்கு நின்றாலும் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. ஜெயிக்க வேண்டிய நபர். ஆனால் தோற்பதற்கு தான் வாய்ப்பு அதிகம். தன் உறுதியை காட்டுவதற்கும், விஜய் மீதான எரிச்சலை கொஞ்சம் அதிகமாக காட்டிவிட்டார் சீமான். விஜய் அவரது மண்டையை விட்டு போக மாட்டேன்கிறார். இயல்பு. பயப்பட வேண்டும். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் 8 சதவீத வாக்குகளில் இருந்துதான் அங்கு சிலர் போக போகிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சுவாரஸ்யமான காத்திருப்பு இருக்கும். நிஜமாகவே 2026 தேர்தலிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கு. விஜய் என்னதான் செய்யப் போகிறார். அவர் 10 வாங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். அதை யாரிடம் இருந்து வாங்குவார். தமிழ்நாட்டில் இருக்கும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்த, வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க காத்திருப்பவர்கள்தான் விஜயிடம் போக போகிறார்கள்.

விஜய் கட்சியால் 3 பேர் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். இளைஞர்கள்தான் விஜயின் வாக்கு வங்கியின் முதல் பகுதியை நிரப்புகிறார்கள். ஏற்கனவே அது யாரிடம் இருக்கிறது என்றால் அண்ணாமலைக்காக பாஜகவில் பல லட்சம் பேர் திரண்டுள்ளார்கள். அவர்களில் சில ஆயிரம் பேர் போவார்கள். சீமானிடம் இளைஞர் பட்டாளம் உள்ளது. அதில் போவார்கள். திருமாவளவனிடம் இளைஞர் பட்டாளம் உள்ளது. அங்கே இருந்தும் போகும். இதேபோல்,  திமுக – அதிமுகவில் இருந்தும் போவார்கள். ஆனால் முதல் 3 இடங்களில் அவர்கள்தான் உள்ளனர். அண்ணாமலையிடம் போனவர்கள் வெறும் தேசியத்திற்காக போகவில்லை. சமுதாய ரீதியாக பார்த்தார்கள். அவரது ஆவேசமான உடல்மொழி இளைஞர்களை ஈர்த்தது.

அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு விஜய் கட்சி விரக்தியில் உள்ளது. அது அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே தெரிகிறது. திமுக – அதிமுக என 2 பேரையும் நீங்கள் விமர்சிக்காவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். இரண்டு பேரும் நல்லவர்கள் அல்ல. நான் நல்லாட்சி தருகிறேன் என்று சொல்லி தானே வந்தீர்கள். அப்புறம் ஏன் ஒருவரை மட்டும் குறி வைக்கிறீர்கள். இல்லை ஆட்சியில் இருந்து அகற்றும் கட்சியை மட்டும்தான் குறிவைப்பேன் என்றால் மற்ற கட்சிகளுக்கு அது பொருந்தும். வளர்கிற கட்சிக்கு அது பொருந்தாது. விஜயகாந்த் இரண்டு கட்சிகளையும் திருடன் என்று சொன்னார். தைரியமாக அடித்தார். அதனால்தான் 10 சதவீத வாக்குகளை பெற்றார். ஆனால் விஜய், திமுகவை மட்டும் அடித்துக்கொண்டிருந்தார். கடைசியில் பார்த்தால் அங்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். அய்யநாதன் வெளியில் வந்து சொல்கிறார். இது வளர்கிற கட்சிக்கு நல்லதல்ல. வெற்றி கிடைக்கும். நேரம் அமைந்தால் துணை முதலமைச்சராக கூட விஜய் வருவார். ஆனால் விஜய் என்கிற பிம்பம் சுக்குநூறாக உடையும் என்று நான் சொன்னேன். அதை அய்யநாதன் உள்ளே இருந்தே சொல்கிறார்.

அதிமுக – பாஜக கூட்டணி விஜய்க்கு ஒரு தெளிவான பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வேறு வழியில்லை நாம் தனியாக தான் நிற்க வேண்டும். அல்லது கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் வந்தால் அவர்களை சேர்த்துக் கொண்டு ஒரு அணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்று. அப்படி என்கிறபோது அதில் சீமானை சேர்க்க முடிந்தால், அது மிக நிச்சயமாக பல இடங்களில் வெற்றி பெறுகிற கூட்டணியாகவும் இருக்கும். மிகப் பல இடங்களில் ஸ்பாய்லர்களாகவும் இருப்பார்கள். அதனால் பாதிக்கப்பட போவது அதிமுகவா? திமுகவா? என்று தெரியாது. சீமான் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிறார். ஆனால் தம்பி விஜயுடன் இணைவதில் எந்த தயக்கமும் இல்லை என்று சீமான் சொல்லமாட்டார் என்று உங்களால் சொல்ல முடியுமா?

திமுக என்கிற எதிரியை வீழ்த்த நான் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறேன் என்று விஜய் சொல்ல மாட்டார் என்று உங்களால் சொல்ல முடியுமா? விஜய்க்கு 2 வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உறுதியாக ஒரு முடிவு எடுத்து, 6 சதவீத வாக்குகள் வாங்கினாலும் பரவாயில்லை. எனக்கு எவ்வளவு வாக்குகள் உள்ளது என்று சோதித்து பார்த்துக்கொள்கிறேன் என்று நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது. மற்றொன்று திமுகவை வீழ்த்திக்காட்டுவோம். 2031ல் நமக்கு ஒரு காலம் காத்திருக்கிறது என்று அவர் வேறு நிலைப்பாட்டை எடுத்தார் என்றால் சில சமரசங்களுக்கு வருவார். திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுக – பாஜக உடன் இணைகிறேன் என்று சொல்ல மாட்டார் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அப்போது கூட சீமான் தனியாக தான் நிற்பார்.

பாமக நடத்தும் சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கான அழைப்பிதழ் விசிக தலைவர் திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சிரித்த முகத்துடன் திருமாவளவன் வாங்கியுள்ளார். சமூக நல்லிணக்கத்திற்கு அந்த புகைப்படம் பயன்படும் என்பதால் ஒரு பத்திரிகையாளராக இதை நான் வரவேற்கிறேன். அந்த புகைப்படம் இரண்டு சமூகத்தின் இணக்கத்திற்கு பயன்பட்டால் நான் சந்தோஷப்படுவேன். எந்த மாநாடு நடைபெற உள்ளதோ, அது கடைசியாக நடைபெற்ற போதுதான் மிகப் பெரிய வன்முறை நடைபெற்றது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் விசிகவும் உள்ளது. அதை எல்லாம் மறந்துவிட்டு போட்டோ எடுங்கள் என்று சொல்லி சிரிக்கும்போது திருமாவளவனின்  மனநிலையை நாம் புரிந்துகொள்ளலாம். அவர் மாநாட்டில் கலந்துகொள்கிறாரா என்பது வேறு.

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க - ராமதாஸ்..

இதன் மூலம் பாமக திமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்களா என்றால், அங்கே தேர்தலில் கொடுப்பதற்கு இடம் இல்லை. பாமகவுக்கு குறைந்தபட்சம் 20 இடங்களாவது கொடுக்க வேண்டும். அவர்கள் 35 தொகுதிகளில் தொடங்கி, குறைந்தபட்சம் 20 தொகுதிகளாவது தர வேண்டும். அவ்வளவு இடங்கள் கொடுக்க திமுகவில் எங்கே இடமுள்ளது. திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளும் உறுதியாக உள்ளன. வேறு ஒரு கட்சியின் இடத்தை புடுங்கி பாமகவுக்கு கொடுப்பது என்பது முடியாது. இடங்களின் அடிப்படையில் இயல்பாக அவர்கள் சேரக்கூடிய இடம் அதிமுக கூட்டணியாகும். அங்கே கொடுப்பதற்கு இடங்கள் நிறைய உள்ளன. அதனால் பாமக அதிமுக கூட்டணியில் சேரத்தான் வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ