spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகனவோடு வந்த மோடி! புறக்கணித்த ஸ்டாலின்! மருத்துவர் காந்தராஜ் நேர்காணல்!

கனவோடு வந்த மோடி! புறக்கணித்த ஸ்டாலின்! மருத்துவர் காந்தராஜ் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழக கூட்டணி விவகாரங்களை அமித்ஷா கவனித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை அரசியல் களத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து  மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் ஒரு உற்சவ மூர்த்தி. நாடாளுமன்றத்திற்கு போகாமல் ஊர் சுற்றுகிறார். அங்கே மூலவர் அமித்ஷா தான். எந்த விதமான முடிவுகளையும் மோடி எடுக்க முடியாது. அதற்கு அவருக்கு அனுமதி கிடையாது. அமித்ஷாவிடம் பிரதமராக வேலைபார்ப்பவர்தான் மோடி. எடப்பாடி பழனிசாமி, மோடியை சந்திக்க செல்வது என்பது, தன்னுடைய கட்சியி உறுப்பினரை எடப்பாடி சந்திக்க செல்வதாக தான் அர்த்தம். எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி கிடையாது. தனித்து ஆட்சி அமையும் என்று சொல்லி வருகிறார். அதிமுக என்கிற பெயரில் பாஜக ஆட்சியை நடத்தப் போகிறார்கள். பாஜக ஆட்சியில் உட்கார்ந்தால் என்ன? எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். ஓபிஎஸ்-ஐ பிரதமர் மோடி சந்திக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். யாரோ ஒரு கட்சிகாரரை, யாரோ சந்தித்தால் எடப்பாடி எதற்காக தலையிடுகிறார். மோடி ஒரு பிரதமர். அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்கு எடப்பாடி ஏன் துடிக்கிறார். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டாம் என்று அமித்ஷா சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி செய்கிறார்.

அதிமுகவை 4 கட்சிகளாக பிரித்து வைத்துள்ளனர். இதெல்லாம் நாடகமாகும். சசிகலா ஆட்சிக்கு வந்தால் நம் தலையில் கைவைத்து விடுவார்கள் என்று பயந்து தான் அந்த ஆளுநர் சொல்லாமால் ஓடிபோனார். அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து ஒருமனதாக சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள். சட்டவிரோதமாக பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என்று ஓடிப்போனார். அப்போதே இவர்களுக்கு தெரிந்துவிட்டது. அதிகாரத்தையும், அமலாக்கத் துறையையும் வைத்துக்கொண்டு செய்யப் போகிறார்கள் என்று தெரிந்துவிட்டது. இன்று வரை அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு யாருடைய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது? அமித்ஷா தேர்தல் ஆணையத்தையும், அமலாக்கத்துறையையும் வைத்துக்கொண்டுதான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். சும்மா ஜனநாயக நாடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேரதல் என்பது ஒரு வேடிக்கை பழனிசாமி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ராஜேந்திர சோழனின் படையெடுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மத்திய அரசு தனியாக புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கீழடி மட்டும் இல்லை. வடமாநில மன்னரை ராஜேந்திர சோழன் வெற்றி கொண்டதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும்  மாற்றினார்கள். ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் என்கிற பெயரை அவர்களால் மாற்ற முடியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர் ராஜேந்திர சோழன். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும். அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் பல பகுதிகள், ஆஸ்திரோலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தன. தட்பவெப்ப சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவில்லை. நார்வேயில் வைக்கிங் என்கிற இனக்குழு இருந்தது. அவர்கள் இங்கிலாந்தை வந்து அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். காரணம் அவர்களுக்கு கப்பல் தொழில்நுட்பம் கிடையாது. பிரிட்டிஷ் இளவரசி ஒருவரை வைக்கிங் இளவசரன் கடத்திச்சென்ற பிறகே, அவர்கள் கப்பல் படையை தொடங்கினார்கள்.அப்படிபட்ட அரசர் வடமாநில அரசரை வெல்ல வில்லை என்று மத்திய அரசு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை அனைத்துக் கட்சியினரும் தொடங்கி இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை தவிர எதிர்க்கட்சிகள் பற்றி யாருக்கும் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி, எதாவது ஒரு போராட்டம், பேரணி, மாநாடு நடத்தியுள்ளாரா? சுற்று பயணத்தையே தேர்தலுக்கு முன்பாக தான் தொடங்கியுள்ளார். சேலத்தில் அதிமுக என்றால் பொன்னையன், செம்மலை போன்றவர்கள் தான். இப்படி ஒருவர் இருந்தது சேலத்துக்காரர்களுக்கே தெரியாது. ஜெயலலிதாவை கண்டுபிடித்தது ஜெயலலிதா. ஏனென்றால் வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதை உடைத்து வெள்ளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த பழனிசாமி வெற்றி பெற்றார். அவருக்கு பதவி கொடுத்தார். எதிர்க்கட்சிகளுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுதான் சொல்ல முடியும். அதை மக்கள் ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம். திமுக அரசை எதிர்த்து அன்புமணி நடைபயணம் தொடங்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் எதற்காக அவர் போராடியுள்ளார். முதலில் ராமதாஸ் அவரை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டாரா? அதை முதலில் உறுதிபடுத்திக்கொள்ள சொல்லுங்கள். அதன் பிறகு நடைபயணம் மேற்கொள்ளட்டும்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

இது ஒருபுறம் இருக்க தவகவினர் அமைதியாக வீடு வீடாக சென்று ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் என்று அவர்களுக்கு அவர்களாக சொல்லிக்கொள்கிறார்கள். முதலில் விஜயை வெளியே வரச் சொல்லுங்கள். பாஜகவினரும் என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டார்கள். ஒய் பிரிவு பாதுகாப்பு எல்லாம் கொடுத்து, அருண் என்கிற அமலாக்கத்துறை அதிகாரியை போட்டும் மிரட்டுகிறார்கள் அப்போதும் வர மறுக்கிறார். அமித்ஷாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார். அப்படி வந்தாலும் இரண்டே நிமிடத்தில் பேசிமுடித்துவிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ