spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - செயலில் இறங்கத் தயாராகுங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயலில் இறங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”போர்ப் பறையின் சத்தம் காதைக் கிழிக்கின்றபோது ஒரு புலியைப்போல நடந்து கொள்ளுங்கள். தாடைத் தசைகளை இறுக்குங்கள், உங்களுடைய இரத்தம் உங்களுடைய தலைக்கு ஏறட்டும்” – வில்லியம் ஷேக்ஸ்பியர்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - செயலில் இறங்கத் தயாராகுங்கள் - ரயன் ஹாலிடேபிரச்சனைகள் அரிதாகவே நாம் நினைக்கின்ற அளவு மோசமாக இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பிரச்சனைகள் எவ்வளவு மோசமாக இருப்பதாக நாம் நினைக்கிறோமோ, அவை துல்லியமாக அவ்வளவு மோசமாக இருக்கின்றன.

ஒரு மோசமான நிகழ்வோடு, அது குறித்த நம்முடைய மன உளைச்சலும் சேர்ந்து கொள்ளும்போது, அது மிக மோசமானதாக ஆகிவிடுகிறது என்ற புரிதல் முக்கியமானது.

we-r-hiring

மனம் குழப்பமில்லாமல் இருக்கும்போது, கைகளும் நடுங்காமல் இருக்கும்.

அப்போது அந்தக் கைகள் வேலைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அவை நல்லவிதமான வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

நாம் எல்லோருமே வாழ்க்கையில் சில அனுமானங்களை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். விஷயங்களை எடைபோட்டுப் பார்த்து அவற்றின் நன்மை தீமைகளை அலச வேண்டும். உலகம் எப்போதும் சிறப்பாக இருக்கிறது என்று நீங்கள் அனுமானிக்க வேண்டும் என்று எவரும் எதிர்பார்ப்பதில்லை. ஓர் உன்னதமான தோல்வியையோ அல்லது தியாகத்தையோகூட எவரும் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை.

எதிர்மறைகளும் முட்டுக்கட்டைகளும் இருக்கும் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொண்ட பிறகும் நீங்கள் செயலில் இறங்குகிறீர்கள் அல்லவா? அதில்தான் உங்களுடைய துணிச்சல் இருக்கிறது. உங்கள் வழியில் எதிர்ப்படும் தடைகளைச் சமாளிக்கின்ற முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் ஒரு சூதாடி என்பதல்ல; மாறாக, அவற்றை நீங்கள் சரியாகக் கணித்துவிட்டு, அந்த ஆபத்தைத் எதிர்கொள்வதற்குச் செயலில் இறங்கத் துணிகிறீர்கள் என்பதுதான்.

கண்ணோட்டங்களை இப்போது நீங்கள் செம்மையாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டதால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது செயலில் இறங்குவதுதான்.

அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

MUST READ