spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் – குரு மித்ரேஷிவா

-

- Advertisement -

குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

நண்பர்களே, வாழ்வில் வெற்றியடைவது எப்படி? நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி? இந்த உலகிலேயே பெரும் அதிகாரம் கொண்டவராவது எப்படி? புகழ் உடையவராவது எப்படி?

we-r-hiring

இப்படி பல கேள்விகளுடன் மக்கள் என்னை தினமும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களைப் பார்த்து நான் சிரித்திருக்கிறேன். இவை அனைத்தும் இயல்பானது. இது எதுவும் தேடிச் சென்று அடையக்கூடியது இல்லை. பிறப்பிலிருந்தே உங்களுக்குள் இயல்பாக இருப்பது.

தனித்துவமான புகழ், திறமை, அதிகாரம். ஆரோக்கியம் அனைத்தும் பிறக்கும்போதே உங்களுக்குள் இருக்கிறது. அதைச் தேடிச்சென்று அடையவேண்டியதில்லை.

ஐயோ, அனைத்தையும் நான் இழந்துவிட்டேனா என்று கேட்கிறீர்களா?

இல்லை, எதையும் நீங்கள் இழக்கவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எதையும் தேடிச்செல்ல வேண்டியதில்லை. அத்தனையும் இயல்பாக உங்களுக்குள் இருக்கிறது. அதிகாரம் வேண்டுமா? இயல்பாகப் பெறலாம். செல்வம், ஆரோக்கியம், புகழ் எதுவாக இருந்தாலும் அதை இயல்பாக அடையக்கூடிய சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது.வாழ்வில் அனைத்தையும் அடையவேண்டுமென்றால் உங்கள் அதிர்வுகளுடன் சரியாக பொருந்தியிருக்க வேண்டும். அவ்வளவுதான். அப்படியென்றால் ஏன் இது மிகவும் கடினமானதாக மாறியது என்கிறீர்களா?

ஏனென்றால், உங்கள் அதிர்வலைகளின் (Frequency) தொடர்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதனால்தான் இந்தக் கேள்வி என்னிடம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறது.

இந்த அதிர்வலைகளுடன் மீண்டும் தொடர்பில் வருவது எப்படி?

இதில் இரண்டு முக்கியக் கூறுகள் இருக்கின்றன. ஒன்று உடல், மற்றொன்று மனம்.

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

உங்கள் உடலும் மனமும் சரியான அதிர்வுகளுடன் பொருந்தியிருக்க வேண்டும் உடலும் மனமும் இந்தப் பிரபஞ்சத்தோடு இணையும்போது ஒரு தனித்துவமான கருவியாக மாறிவிடுகிறது. அப்போது உங்கள் பிராண சக்தி உச்சத்தில் செயல்படுகிறது. அப்படிச் செயல்படும் போது இந்த உலகில் உள்ள அனைத்தையும் எளிதாகப் பெறுகிறீர்கள்.

தண்டவாளத்தின் ஒருபுறம் உங்கள் மனம் எனும் சக்கரம், மறுபுறம் உங்கள் உடல் எனும் சக்கரம். இந்த இரண டும் நேர்கோட்டில் இருந்தால்தான் வாழ்வெனும் ரயில் அதன் இலக்கை அடைய முடியும். தண்டவாளத்தில் ஒன்று அதன் கோட்டை விட்டு விலகினாலும் போதும், ரயில் முன் நகர முடியாமல் அங்கேயே நின்றுவிடும்.

உடலையும் மனதையும் நேர்கோட்டில் கொண்டுவருவது எப்படி? பிரபஞ்சத்தோடு என் அதிர்வலைகளை சரியாக பொருத்திக்கொள்வது எப்படி?

உங்களுக்குப் புரியும்படியாக அதன் அடிப்படையை எளிதாகச் சொல்கிறேன். உடல் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் கலவை இந்த ஐந்து கூறுகளுடனும் உடலானது சரியான சமநிலையில் பொருந்தியிருக்க வேண்டும். உங்கள் அதிர்வலைகளோடு சரியான கோட்டில் பொருந்தியிருக்கும்போதுதான் பிராண சக்தி உச்சத்தில் செயல்படும்.

நீங்கள் உண்ணும் உணவு நிலத்திலிருந்து கிடைக்கிறது. பிறக்கும்போது வெறும் அரையடி இருக்கும் உடல் நிலத்திலிருந்து கிடைக்கும் பழம், காய்கறிகளைச் சாப்பிட்டு ஐந்தடிக்கு மேல் வளர்கிறது.

நிலத்தை வெறும் மண்தானே என்று நினைக்கிறீர்கள் இல்லையா? ஆனால், அந்த மண் உங்கள் உடலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நிலம்தான் உடல் என்னும் அதிநவீன சாதனத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.

உடலான இந்த நிலத்தோடு உங்கள் அதிர்வலைகள் பொருந்தாமல் விலகியிருக்கும்போது அனைத்து உடல் பிரச்சினைகளும் வரத் தொடங்குகிறது. உடல் எடை அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. நோய்கள் உருவாகின்றன.

உங்கள் உடல்நிலை நோயில்லாமல் அருமையானதாக இருக்கவேண்டும் என்றால் நிலத்தோடு உங்கள் உட லின் அதிர்வலைகளைச் சரியாகப் பொருத்தி சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

அதேபோல் மனமும் அதன் கூறுகளோடு சரியாகப் பொருந்திவிட்டது என்றால் அனைத்து செல்வங்களையும் எளிதாகப் பெறுவீர்கள். எதன் பின்னாலும் நீங்கள் ஓடவேண்டிய அவசியமில்லை. அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக வந்து அமைந்துவிடும். நினைவிருக்கட்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அதிர்வலை இருக்கிறது.“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

உதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரரின் மனம் சரியான அதிர்வலையோடு பொருந்தும்போது அவரது திறமை உச்சத்தில் இருக்கும். அதன் மூலம் அவர் பேர், புகழ், பணம், அதிகாரம், அங்கீகாரம், சந்தோசம் என அனைத்துச் செல்வங்களையும் எளிதாக அடைவார்.

ஒரு தொழிலதிபருடைய உடலும் மனமும் அதன் அதிர்வுகளோடு சரியாகப் பொருந்தும்போது அனைத்து செல்வங்களும் அவர் செய்யும் தொழில் மூலமாகவே அவருக்குக் கிடைத்துவிடும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் அவருக்கான தனித்துவமான அதிர்வலைகள் இருக்கும். அதனுடன் சரியாக அவர்களை இணைத்துக்கொண்டால் போதும். பணம், பேர்,புகழ்,நிம்மதி, சந்தோசம் என வாழ்வின் அத்தனை சொத்துகளையும் இயல்பாகப் பெறலாம். வாழ்கை மிக எளிதாக மாறிவிடும்.

என்னிடம் இந்தக் கேள்விகளோடு வருபவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லக்கூடியது ஒன்றேதான். எண்ணங்களைத் தெளிவானதாக, நேர்மறையானதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் போட்டியாளர் வளர்றார், நிறைய சம்பாதிக்கிறார் என்றவுடன் பொறாமையோ வருத்தமோ அடைந்தீர்கள் என்றால் உங்களுக்கு வரவேண்டிய செல்வம் தடைபட்டுவிடும்.

உங்கள் போட்டியாளரைப் பாராட்ட முடியவில்லை. அவருக்காக மகிழ்ச்சியடைய முடியவில்லை என்றால் உங்கள் அதிர்வலைகளோடு பொருந்தியிருக்க முடியாமல் விட்டு விலகிச் சென்றுவிடுகிறீர்கள்.

ஆயிரத்து ஒன்றாவது தடவையாகச் சொல்கிறேன் நண்பர்களே…இந்தப் பிரபஞ்சம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்து வருத்தப்படும் போது அது உங்களையும் சேர்த்தே பாதிக்கிறது. இந்த எதிர்மறை உணர்வுகள் மூலமாக உங்கள் செல்வத்தை நீங்களே தடை செய்துவிடுகிறீர்கள். முதல் அத்தியாயத்தில் சொன்ன தேவதைக் கதையை எப்போதும் மனதில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் மனதையும் எண்ணங்களையும் எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறையானதாகவே வைத்துக்கொள்ளப் பழகுங்கள். உடலும் மனமும் உங்கள் பிராண சக்தியோ டம் இந்தப் பிரபஞ்சத்தோடும் சரியாக இணைந்திருக்கும்போது நீங்கள் உச்சகட்ட சக்தியைப் பெறுகிறீர்கள்.

இந்த அதிர்வலைகளுடன் எப்படி என்னைச் சரியாகப் பொருத்திக்கொள்வது என்கிறீர்களா?

அதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன.“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவாஇதைத்தான் நம் அல்கெமி பயிற்சியில் தெளிவாக, அனுபவப்பூர்வமாகக் கற்றுத்தருகிறோம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்கெமியில் இணைந்து தங்கள் உடலை, மனதை பிரபஞ்சத்தோடு சரியாக இணைத்துக்கொண்டு சமநிலை பெற்றிருக்கிறார்கள். சர்க்கரை நோய், கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கு வயதோ,தொழிலோ எதுவும் ஒரு பொருட்டல்ல. எந்த வயதிலும், யாராக இருந்தாலும் உங்களை சமநிலைப்படுத்திக்கொள்ளலாம். பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தொழில் செய்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள்- இப்படி யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து பயனடையலாம். எந்தவொரு மதத்தையும் சடங்குகளையும் முன்னிறுத்தும் பயிற்சி அல்ல. எம்மதத்தவரும் எந்நாட்டினரும் எளிதாக இந்தப் பயிற்சிகளைப்பெற்று வாழ்வில் விரும்பிய அனைத்து செல்வங்களையும் அடைய முடியும்.

ஒருமுறை உங்கள் உடல் அதன் கூறுகளோடு சரியாகப் பொருந்திவிட்டால் அதன்பிறகு எந்த நோயும் உங்களை நெருங்காது. வாழ்நாளில் ஒரு தலைவலியோ காய்ச்சலோ கூட உங்களைத் தொடாது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் உடலை எந்தவிதமான நோய்களும் அண்டாமல், உங்கள் மனதில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படாமல் இருந்தால் எப்படியிருக்கும்?

மிகவும் ஆனந்தமாக இருப்பீர்கள் இல்லையா? சக்திவாய்ந்தவராக, அதிகாரமுடையவராக இருப்பீர்கள் இல்லையா? அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பீர்கள் இல்லையா?

அதிர்வலைகள்தான் நமக்கு மிகப் பெரிய செல்வத்தைத் தருகிறது. இந்த அதிர்வலைகள் பிரபஞ்ச சக்தியோடு ஒத்திசைந்திருக்கும் பொழுதுதான் மிகப்பெரிய செல்வம் நம்மை வந்து சேர்கிறது என்பதை பற்றியெல்லாம் முந்தைய அத்தியாங்களிலேயே விளக்கமாகப் பார்த்துவிட்டோம்.

அது எல்லாம் புரிகிறது. ஆனால், இதை நான் எப்படி எனக்குள் உருவாக்குவது? என்று கேட்பீர்கள் என்றால்…

அந்தக் கேள்விக்கு ஒரு மிகப் பெரிய தீர்வாக அமையக் கூடியது நம்முடைய ‘அல்கெமி’ வகுப்பு.

இது எப்படி எல்லாம் பலன் தருகிறது? இதற்கு வயதோ, தொழிலோ ஒரு பொருட்டல்ல என்பதைப் பற்றியெல்லாம்கூட முந்தைய அத்தியாயங்களிலேயே தெளிவாகக் கூறியிருக்கிறேன்.“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவாஉங்களில் பலருக்கும் ‘அல்கெமி’ வகுப்பிற்கு வந்தால் தான் பிரபஞ்ச சக்தியோடு ஒத்திசைந்து நான் இருக்க முடியுமா? இதற்கான ஒரே தீர்வு இந்த வகுப்பு மட்டும்தானா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அப்படித்தானே?

அவசியமில்லை. அந்தக் காலத்தில் சித்தர்கள் இதற்குண்டான விஷயங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். அதாவது, ஒத்திசைவாக இருக்கக்கூடிய பல விஷயங்களை அவர்கள் செய்திருக்கின்றனர். அதற்குண்டான பல வழிகளை அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

அதிர்வலைகள், ஒத்திசைவு என்றெல்லாம் சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறீர்களா?

அதிர்வலைகளையும் ஒத்திசைவையும் பற்றிச் சொல்வதற்கு முன்னால், இதற்கு ஒரு முக்கியமான ஆக்கக்கூறு இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகின் பெரும்பகுதியானது நீரால் அமையப் பெற்றது. நீரின்றி இந்த உலகமே இயங்காது.

அதுமட்டுமின்றி மனித உடலின் பெரும்பகுதியும் நீரால் அமையப் பெற்றதுதான். உடலின் நீர் அளவு சற்று குறைந்தாலும் போதும் பல உபாதைகள் வரும்.

இப்படி உள்ளும் புறமும் முற்றிலுமாக நீரால் சூழப்பட்டிருப்பதுதான் இந்தப் பிரபஞ்சம்.

இதைத்தான் திருவள்ளுவரும் மூன்றே வார்த்தைகளில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்று நீரின் இன்றியமையைப் பற்றி ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட நீருக்கும் செல்வத்திற்கும் நமக்கும் இந்தப்  பிரபஞ்சத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதாவது எல்லாவற்றினோடும் நீருக்கும் தொடர்பு . “Water is the connecting point.”

ஏனென்றால், நமக்கும் அதிர்வலைகளுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையிலான ஒரு மிகப் பெரிய பாலமாக, ஒரு தொடர்பாக நீர் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நீரை ஒரு மிகப் பெரிய உணர்வாளர் என்றே சொல்லலாம்.

நீங்கள் செல்வத்தை வரவழைப்பதற்காக பல முயற்சிகள் செய்கிறீர்கள் அல்லவா?

உங்கள் வீட்டில் ஒரு பணக்கஷ்டம் வருகிறது என்றால். உடனடியாக என்ன செய்வீர்கள்? ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோசியக்காரரிடம் செல்வீர்கள். அவர், வீட்டில் ஒரு கணபதி ஹோமம் செய்யுங்கள். ஒரு லக்ஷ்மி ஹோமம் செய்யுங்கள் என்று ஏதாவது ஒரு பரிகாரத்தைச் செய்யச் சொல்வார். நீங்களும் அதைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் செய்ய முயற்சிப்பீர்கள்.

கணபதி ஹோமம் என்றால் என்ன? ஒரு ஐயரை வர வழைத்து வீட்டில் ஹோமகுண்டம் வளர்த்து ஹோமம் செய்வது.

சரி, அதை எப்படிச் செய்வார்கள்? ஒரு கலசத்திற்குள் நீரை நிறைத்து, அதில் ஐயர் தொடர்ந்து ஒரு மந்திரத்தை உச்சரிப்பார். அதற்கென்றே இருக்கும் ஒரு மந்திரத்தை இடைவிடாமல் உச்சரிப்பார். அந்த மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க அது ஒரு குறிப்பிட்ட அதிர்வை அந்த இடத்தில் உருவாக்குகிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த அதிர்வுதான் உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கப் போகிறது.

அது எப்படி? மந்திர உச்சாடனத்தால் ஏற்படுகின்ற அதிர்வு. அந்த கலசத்தில் இருக்கும் நீரில் பதிவாகி இந்தப் பிரபஞ்ச சக்தியை அடைகிறது. அந்த நீரை வீடு முழுவதும் தெளிப்பார்கள். அதுதான் உங்களுக்கு சுபிட்க்ஷத்தைக் கொடுக்கிறது.

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

இது ஒரு செயல்முறை.

இதுவே ஒரு கோவில் என்று வையுங்கள். கோவிலுக்கு வருகின்றவர்களுக்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், வியாபாரத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு காண்பதற்காக கோவிலுக்குச் சக்தி கொடுக்க வேண்டும். மாபெரும் சக்திகளை ஒருங்கிணைத்து சித்தன் உருவாக்கிய ஒரு சக்தி பீடம்தான் கோவில் என்று சொல்லலாம்.

பல பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் சித்தர்களால் உருவாக்கப்பட்டதுதான். அந்தக் கோவில்களில் சக்தி குறையும்போது கும்பாபிஷேகம் செய்கிறார்கள்.

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கும்பாபிஷேகத்திற்கு ஒரு 48 நாட்கள் மண்டல பூஜை செய்வார்கள். அதிலும் நீரை வைத்துதான் மந்திரம் உச்சரிப்பார்கள்.

அந்த மந்திரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அது நீரில் பதிவாகும். அந்த நீரை எடுத்து கலசத்தில் ஊற்றுவார்கள். அது கர்ப்பக்கிரகத்தோடு ஒரு தொடர்பில் இருந்து, பிராண பிரதிஷ்டையை உருவாக்கி, அங்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது.

இப்படி, மறுபடியும் அந்தக் கோவிலுக்கு மிகப் பெரிய சக்தி கிடைத்துவிடுகிறது. இது மறுக்கமுடியாத உண்மை. அந்த நீரைத்தான் கும்பாபிஷேகம் முடிந்ததும் நம் மீது தெளிக்கிறார்கள். கும்பாபிஷேகத்தன்று பார்த்தீர்கள் என்றால் பல லட்சம் மக்கள் கோவிலுக்கு வருவதே ஒரு துளி நீர் தன் மீது படவேண்டும் என்பதற்காகத்தான் ஏனென்றால் அதற்குள்தான் அந்த அதிர்வு இருக்கிறது.

இரண்டு விஷயத்தை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்று, நீருக்கும் செல்வத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது.
இரண்டாது விஷயம், அதிர்வின் மூலமாகத்தான் அது தொடர்பில் இருக்கின்றது.

அதற்காக நீங்கள் இந்த வகுப்பிற்கு வந்துதான் இதைச் செய்யவேண்டும் என்பதில்லை. இதுபோல நிறைய சடங்குகள் இயற்கையில் நம் சித்தர்கள், முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

காலையில் எழுந்து, மந்திரம் சொல்லி, சாமி கும்பிடுவது. கோவிலுக்குச் செல்வது. கும்பாபிஷேகம் செய்வது. மந்திரங்கள் உச்சரிப்பது. யாகங்கள் நடத்துவது. இப்படிப் பல வழிகள் இருக்கின்றன.

இது எல்லாமே அதிர்வுகள்தான். இந்து மதத்தில் இருக்கக்கூடிய பலவகையான சடங்குகள் எல்லாமும் இந்த ஒத்திசைவிற்காக உருவாக்கப்பட்டவைதான்.

அதன் மூலமாகவும் இந்தப் பலனைக் கண்டிப்பாகப் பெறமுடியும். பல்லாயிரக்கணக்கானவர்கள் பெற்றிருக்கவும் செய்கிறார்கள்.

இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் பண்டைய காலம் தொட்டே இருந்துவந்திருக்கின்றன. இந்து மதத்தில் என்று மட்டுமில்லை. ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமான சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் நீரைப் பயன்படுத்திதான் ‘ஞானஸ்நானம்’ செய்கிறார்கள். இஸ்லாமியர்கள் சம்சம் நீர் என்று சம்சம் கிணற்று நீரை புனித நீராகப் பயன்படுத்துகிறார்கள். புத்த மதம், ஜென் மதம் என்று இந்த உலகில் உள்ள அனைத்து மதத்திலும் நீர் புனிதமான ஒன்றாகவே கருதப்பட்டுவருகிறது. அனைத்து விதத்திலும் நீர் இன்றியமையாத முக்கியப் பங்கும் வகிக்கிறது.

இது எல்லாமே ஒரு விஞ்ஞானம்தான்.

ஆனால், மக்களுக்கு இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய விஞ்ஞானம் தெரியவில்லை.“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோவிலில் தரப்படும் தீர்த்தத்தைக் கொண்டுவந்து குடிக்கச் சொல்வார்கள். பாவங்கள், தோஷங்கள் தீர்வதற்காகப் புனித நீரில் குளிக்கச் சொல்வார்கள். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கோவிலில் கிடைக்கும் தீர்த்தம் மருந்தாகிறது.

என்ன காரணம்? கோவில்களில் இடைவிடாது செய்கின்ற பூஜைகள் மந்திரத்தால் நீரில் அதிர்வுகள் ஏற்றப்படுகின்றன. அந்த நீரைப் பருகும்போது நிறைய நற்பலன்கள் கிடைக்கின்றன.

உடல்நிலை சரியில்லை என்றால் தன்வந்திரி மந்திரம், நன்றாகப் படிப்பதற்கு ஹயக்ரீவர் மந்திரம் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது.

மந்திரம் என்று சொன்னாலே அது அதிர்வோடு சம்பந்மந்திரத்தினால் நீரில் அதிர்வலைகள் உருவாகுகின்றன. நம் உடலின் மொத்த எடையளவில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் நீர் நிறைந்திருக்கிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த நாளங்கள் செல்கின்றன.

அப்படியென்றால் நாம் மந்திரங்களை உச்சரிக்கும் போது வெளியில் இருக்கும் நீரில் மட்டுமின்றி நம் உட லுக்குள் ஓடும் ரத்தத்தில் உள்ள நீரிலும் அதிர்வலைகள் ஏற்பட்டு உடலில் சக்தி மேலோங்குகிறது.

காலையில் எழுந்து ஒரு அரைமணி நேரம் மந்திரம் சொன்னாலே இவ்வளவு பலன் கிடைக்கிறது. கணபதி ஹோமம் ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்தாலே இவ்வளவு பலன் கிடைக்கிறது. பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வந்தாலே இவ்வளவு பலன் கிடைக்கிறது என்றால்? நம் உடலில் இருக்கும் நீர் முழுவதிலும் அந்த அதிர்வலைகள் எப்போதும் நிறைந்திருந்தால்?எவ்வளவு பலன்கள் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நம்மை நேரடியாக முழு நேரம் இந்த உணர்வுக்குள் கொண்டுவருவதுதான் அல்கெமியின் நோக்கம்.

இது அந்தக் காலத்தில் குருகுலத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயம். இதைத்தான் நம்முடைய அல்கெமி வகுப்பிலும் செய்கிறோம். பலனைப் பல்லாயிரம் மடங்கு பெருக்குவதற்கான ஒரு வாய்ப்பு இந்த வகுப்பில் இருக்கிறது.

அல்கெமி செயல்முறையில் (Process) நாம் என்ன செய்கிறோம் என்றால், எப்போதுமே நீங்கள் அந்த ஒத்திசைவோடு இருப்பதற்கு உண்டான ஞானத்தை உங்களுக்குள்ளே புகுத்துகிறோம். இந்த வகுப்பின் மூலமாக ஒருவரின் இயக்கமுறையையே (Operating System) நாங்கள் மாற்றுகின்றோம். ஒருவருடைய மனநிலையை சரியான பாதைக்குக் கொண்டுவந்து நிறுத்தக்கூடிய செயல்முறையைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றோம்.

இதனால், நீங்கள் தானாகவே அதிர்வலைகளோடு ஒத்திசைந்துவிடுவீர்கள்.

உதாரணமாக, வானொலியில் ஒரு பாட்டு கேட் டுக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பாடல்கள் எல்லாம் அலைவரிசையாக நம்மைச்சுற்றி இருக்கின்றன. என்றாலும் குறிப்பிட்ட அந்த வானொலி அலைவரிசைக்கு ட்யூன் செய்தால் மட்டுமே பாடலைக் கேட்க முடியும்.

ட்யூன் செய்யத் தெரியவில்லை என்றால் அந்தப் பாடலை கேட்க முடியாது. என்னதான் தலைகீழாக நின்றாலும் பாடல் வராது. பாட்டு வரவில்லை என்பதற்காகப் பாடல் இல்லாமலே போய்விடுமா?

அது போல் உங்களுக்கு செல்வம் வரவில்லை என்பதற்காக செல்வம் இல்லாமலே போய்விடுமா?“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவா

உண்மையில் அப்படி எதுவுமில்லை. நீங்கள் சரியாக ட்யூன் செய்யவில்லை, அவ்வளவுதான். 98.4 அலைவரிசையில் சரியாக ட்யூன் செய்து வைக்கும் பொழுது பாடலைத் தேடி நீங்கள் செல்லவேண்டியதில்லை. உங்களைத் தேடி பாடல் வரும்.

அப்போது நீங்கள் சரியான நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

யாரோ ஒருவர் அவருடைய ரேடியோவை அவ்வப்போது போட்டுக் காண்பித்துவிட்டு போவது எப்படியிருக்கும்? நீங்களே நிரந்தரமாக அந்த நிலையத்திற்கு ட்யூன் ஆகிவிட்டீர்கள் என்றால் எப்படியிருக்கும்?

நீங்கள் யாரையும் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இருக்காது இல்லையா? எப்போதுமே பாடல் உங்களுக்குச் சொந்தமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் - குரு மித்ரேஷிவாஅந்த நிலைபாட்டுக்கு உங்களை ட்யூன் செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

அதனால்தான் இந்த வகுப்பை உலகம் முழுவதும் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.

வகுப்பிற்கு வந்தே தீரவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் விருப்பம். வீட்டில் இருந்துகொண்டே இதைச் செய்ய முடிந்தது என்றால் தாராளமாகச் செய்யலாம். அது இன்னும் சிறப்பு.

செல்வம் உங்களைத் தேடி வந்தடைந்து, நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ, தேவி இராஜ மாதங்கியைப் பிரார்த்திக்கிறேன். எல்லாம் செயல்கூட என் வாழ்த்துக்கள்!

MUST READ