Homeசெய்திகள்கட்டுரைநள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

-

- Advertisement -

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர் தாக்குதல் குறித்தும், அதன் பின் விளைவுகள் குறித்தும் பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நள்ளிரவில் நடத்தியுள்ளது. இவ்வளவு சீக்கிரமாக இந்தியா தாக்குதல் நடத்துவதற்கு வலதுசாரிகள் மற்றும் சங்க பரிவாரங்களின் அழுத்தம் தான் காரணம் என்று தெரிகிறது. பஹல்காம் தாக்குதலில் கடற்படை வீரர் கொல்லப்படுகிறார். அவரது மனைவி பேசும்போது, தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்குவதை விடநாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தனக்கு உதவியவர்கள் அங்குள்ள இஸ்லாமியர்கள் தான் என்று அவர் தெரிவித்தார். அதற்காக எந்த அளவுக்கு வலது சாரிகள் அந்த அம்மாவை துன்புறுத்தினார்கள்.

அதற்கு கடற்படையின் தலைமை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இறுதியாக தேசிய மகளிர் ஆணையம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என யாரும் இந்த விஷயத்தில் தலையிட வில்லை. வடஇந்திய ஊடகங்கள் பகல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து டிஆர்பிக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆபரேஷன் சிந்தூருக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். எனக்கு பாதுகாப்பு கொடுப்பதன் காரணமாகத்தான் இன்று நான் தைரியமாக நேர்காணல் அளிக்க முடிகிறது .இன்றைக்கு பலர் அதிகளாக வெந்துகொண்டு இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பாக இருக்க காரணம் மத்திய அரசுதான்.

காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகள் பிரச்சினைக்குரியதாக உள்ளது. அதனால் அங்கு படைகளை நிறுத்த வேண்டி உள்ளது. சீனா உடன் வடகிழக்கு மாநில எல்லைகளில் படைகளை நிறுத்த வேண்டி உள்ளது. இதேபோல், ஷேக் ஹசினா விவகாரம் தொடர்பாக வங்கதேசம் நமக்கு எதிரிகளாக மாறி விட்டார்கள். இதேபோல், இலங்கைக்கு எதிராகவும் படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. தற்போது ஆப்பிரிக்காவின் ஜிபோட்டியில் உள்ள தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சீனாவின் போர்க்கப்பல்கள் அரபிக்கடலை நோக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த போர்க்கப்பல்கள் கராச்சி துறைமுகம் அருகே நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை காரச்சி துறைமுகத்திற்கு வெளியே 2 போர்க்கப்பல்களை நிறுத்தியதால் அவர்களுக்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது சீன போர்க்கப்பல்கள் காரச்சிக்கு விரைந்துள்ளன. இதேபோல், துருக்கியின் போர்க்கப்பல் ஏற்கனவே கராச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களின் மீது மட்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் வன்முறையை , தீவிரவாதிகளை கண்டித்துள்ளனர். மாறாக பாகிஸ்தானை யாரும் கண்டிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்காலிக உறுப்பினராக சேர்ந்துள்ளது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வைத்து விளையாட பார்த்தது. ஆனால் அதற்கு முடியவில்லை. அது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டிருக்கவே கூடாது. இது ராஜதந்திர ரீதியிலான தோல்வியாகத்தான் பார்க்கிறேன். நேற்று 57 உறுப்பினகர்ளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒஐசி வெளியிட்டுள்ள அறிக்கை முழுக்க முழுக்க பாகிஸ்தானை ஆதரித்துள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு தன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரத்துக்கு காஷ்மீர் பிரச்சினைதான் காரணம் என்றும்,  அந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் பிரச்சினை வெடித்துக்கொண்டிருக்கும் என்று இதனை காஷ்மீர் பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள். 57 நாடுகள் இன்றைக்கு இந்தியாவுக்கு எதிராக உள்ளன. இது ஜெய்சங்கரின் டிப்ளமசிக்கும், அடாவடி தனத்திற்கு கிடைத்த பெரிய மரண அடியாக நாம் கருதுகிறோம். கத்தார் நாட்டின் தலைவர் அல்தானி, நேற்று பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். அப்போது பாகிஸ்தானை கண்டிக்கிறோம் என்று அவர் ஒரு வார்த்தை சொல்லவில்லை. இதுதான் பிரச்சினையாகும்.

டிரம்ப் என்ன சொல்கிறார். இந்தியா பாகிஸ்தானுக்குள் பல ஆண்டுகளாக பிரச்சினை உள்ளது. அவர்கள் அதை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. அப்போது வெளிநாடுகள் உடனான இந்தியாவின் தூதரக உறவுகளில் முழுமையாக தோல்வி ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். வெளிநாடுகளுக்கு சென்று அனைவரையும் சகட்டு மேனிக்கு திட்டுகிறார். அனைவரும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதுபோல் சித்தரித்தார். கடைசியில் உலக நாடுகளில் ஒருநாடு கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று அந்த நாடுகளுக்கும் தெரிகிறது. அப்படி தெரிந்தும் அவர்கள் நம்மை சப்போர்ட் செய்வது கிடையாது ஏன்? அது பாஜகவின் தோல்வியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ