spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் இறக்கிய அஸ்திரம்! நேருக்கு நேர் வெளுத்துவிட்ட நீதிபதி!

ஸ்டாலின் இறக்கிய அஸ்திரம்! நேருக்கு நேர் வெளுத்துவிட்ட நீதிபதி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கட்டாயம் என்கிற மத்திய அரசின் வாதம் அடிபட்டு போகிறது என்று ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதன் பின்னணி குறித்து, ஊடகவியலாளர் இந்திர குமார் தேரடி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி பாஜகவை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதை நாம் ஏற்கனவே சொன்ன விஷயம்தான். இது நீதிமன்றத்தில் நிற்காது என்று. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், அமல்படுத்தாமல் இருப்பது மனித உரிமை மீறுகிறது என்றும் உச்சநீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 32 அடிப்படை உரிமைகளை காப்பதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும்.

புதியக் கல்விக்கொள்கை என்று மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குகிறார்கள். அதை அமல்படுத்துவது மாநில அரசுகளின் உரிமையாகும். அதனை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று எந்த வித கட்டாயமும் கிடையாது. ஏனென்றால் கல்விக் கொள்கை தானே தவிர நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமோ அல்லது அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரமோ கிடையாது. இதன் காரணமாக மாநில அரசு தன்னுடைய கல்விக் கொள்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து ஜி.எஸ்.மணி என்கிற அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுத்தாக்கல் செய்கிறார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றியான விவகாரங்களை தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் தாக்கல் செய்யப்படுகிற ரிட் மனுக்களின் கீழ் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய முடியும். மாநில அரசாங்கம் தேசிய கல்விக்கொள்கை போன்று எந்த ஒரு கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலமாகவோ, அல்லது அமல்படுத்தாமல் வைத்திருப்பதன் மூலமாகவோ  அடிப்படை உரிமைகளை மீறுவதாக அது அமைந்திருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட்டு வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்று நீதிமன்றம் சொல்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு 12 முதல் 35 வரையிலான பிரிவுகள் தான் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை. இந்த அடிப்படை உரிமைகளை ஏதாவது ஒரு வகையில் மாநில அரசு மீறுகிறதா? என்பதுதான் கேள்வி. அங்குதான் ஜி.எஸ்.மணி, தன்னால் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார். நீதிமன்றம், உங்களை யார் இந்தி கற்றுக்கொள்ள கூடாது என்று தடுத்தார்கள். மாநில அரசு ஒரு கல்விக் கொள்கையை பின்பற்றுகிறது. உங்களுக்கும் இந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், நீங்களே குறிப்பிடுகிறபடி, தற்போது டெல்லி வாசியாகத்தான் தற்போது இருக்கிறீர்கள். இங்கே உங்களை எந்த விதத்திலும் இந்தி கற்றுக்கொள்ளக் கூடாது என்று யாரும் தடுக்கவில்லை என்பதுதான் வாதம். ஆனால் மாநில அரசு யாரும் இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று தடுப்பது கிடையாது. இந்தி பிரச்சார சபாக்கள் இன்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பலரும் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

dharmendra pradhan

நீதிமன்றம், உங்களுக்கும், தேசிய கல்விக்கொள்கைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றுதான் கேள்வி எழுப்புகிறது. நீதிமன்றம் எழுப்புகிற இந்த கேள்விக்கு பதில் இல்லாமல்தான் மீண்டும் இந்தி வாதத்தை வைத்தார். அப்போது தான் போய் கற்றுக்கொள்ளுங்கள், யார் உங்களை தடுத்தார் என்று சொல்கிறார்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை கிடையாது. அனைவருக்கும் கல்வி, ஆர்.டி.இ ஆகியவை தான் அடிப்படை உரிமைகளாகும். கல்வி பெறும் உரிமையை இது எதாவது வகையில் பாதிக்கிறதா? என்றால் இல்லை. அப்போது சட்டப்பிரிவு 32ன் கீழ் ரிட் மனுத் தாக்கல் செய்யும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து,  நீதிமன்றத்தின்  நேரத்தை இந்த நபர்கள் வீணடிக்கிறார்கள்.

இந்த ஜி.எஸ்.மணி என்பவர் மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு வேலைதான் இந்த வழக்கும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிற முடிவில் எந்தவித ஆட்சேபனையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முடிவில் நீதிமன்றம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தலையிடவே முடியாது என்று தள்ளிவிட்டிருக்கிறது.

இது மத்திய அரசுக்கு சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான செய்தியாகும். மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை கட்டாயம் கட்டாயம் என்று சொல்கிறார்களே, அப்படி கட்டாயமாக இருந்தால் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கலாமே. அது கட்டாயமாக இல்லையே. அதனால்தான் நீதிமன்றம், வேறு ஒரு முடிவை எடுக்கிறது. இதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்களும் தெளிவு பெறுவதற்கான ஒரு தீர்ப்பாக நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ